நாகை நகர இஸ்லாமிய கலாச்சாரம பேரவை சார்பாக இன்று பித்ரா விணியோகம் செய்யப்பட்டது. ஒரு பொருளின் மதிப்பு 300 ரூபாய். தலா 50 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
செய்திகள்
இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம்
தூத்துக்குடி மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி(MJK) யின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை(IKP) காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஃபைசல் மெளலவி அவர்கள் ஃபித்ரா வினியோகத்தை தொடங்கி வைத்தார் 70 பயனாளிகளுக்கு 13175 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். தகவல் : மஜக ஊடகபிரிவு
நாகை நகராட்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் வேலுமணியுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு .!
நாகப்பட்டினம் நகராட்சி 150 ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடவிருக்கிறது . இதனையொட்டி நாகை , நாகூர் நகரங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது . இது குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களும் , நாகை நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் அவர்களும் ஆலோசித்து , அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன . புதிய பூங்காக்களை உருவாக்குதல் , குளங்களை தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி தளம் அமைத்தல் , கடற்கரைகளை அழகு படுத்துதல் , சாலைகளை சீரமைத்தல் , குடிநீர் தொட்டிகள் அமைத்தல் , வரவேற்பு வளைவுகள் கட்டுதல் , பள்ளிகூட கட்டிடங்களின் தரம் உயர்த்தி விரிவாக்குதல் , ஆங்காங்கே கழிப்பறைகளை கட்டுதல் , நகராட்சி அங்காடிகளை சீரமைத்தல் , புதிய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட விசயங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான உத்தேச திட்ட மதிப்பீடு 52 கோடி ரூபாய் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டது . இன்று கோவை வந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.
விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி…
ரம்ஜான்_பண்டிகை முன்னிட்டு சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.சையதுசுல்தான்இப்ராஹிம். தலைமையில்,அ.இ.அ.தி.மு.க. சிவகாசி நகர செயலாளரும். சிவகாசி நகர்மன்ற துணை தலைவருமான Kaa.அசன்பதுருதீன் அவர்கள், வேட்டி சேலை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் 20 வது வார்டு அ.தி.மு.க.செயளாலர்.சாகுல் ஹமிது,ரவி,மஜகமாவட்டபொருலாளர்.காஜாமைதீன், நகர பொருலாளர். சேக். முகமது, அபுதாகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
திறமையை நிரூபித்த தமிழ்நாடு காவல்துறை…
தமிழ்நாட்டை பரபரபாக்கிய சகோதரி #சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளி ராம்குமாரை நேற்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது தமிழ் நாட்டு மக்களை நிம்மதி பெற செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் குறுகிய புத்தியுடன் சாதி,மத பதட்டத்தை தூண்டி ஆதாயம் பெற முயன்ற ஃபாஸிஸ்டுகளின் முகங்களை தமிழ் நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டு விட்டார்கள். அவர்களின் சகுனித்தனங்களும் இதன்மூலம் முற்றுப் பெற்றுவிட்டது. சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தை தொடர்பு படுத்தி அவர்கள் யாரயேனும் அப்பாவியை கைது செய்ய வைக்க பல நெருக்கடிகள் உருவாக்கப்பட்ட போதும்,இந்த விஷயத்தில் காவல்துறையை நேர்மையாக செயல்பட வைத்த #தமிழக_முதல்வர்_டாக்டர்_அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையுடன், திறமையுடன் இவ்விஷயத்தில் புலனாய்வு மேற்கொண்டு கச்சிதமாக பிரச்சினைகளை கையாண்ட தமிழ்நாடு காவல்துறையையும் பாராட்டுகிறேன். இப்படிக்கு M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 02_07_16