#மறைமலை_அடிகளின்_பெயரால்_தனித்தமிழ்_ஆராய்ச்சி_நிலையம்_வேண்டும்! #முஸ்லிம்கள்_இடஒதுக்கீட்டை_உயர்த்தி_தர_வேண்டும்! #நாகப்பட்டினம்_துறைமுகத்தை_ஆழ்கடல்_துறைமுகமாக_செயல்படுத்த_வேண்டும்! இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MA,MLA., பட்ஜெட் பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பட்ஜெட்டை வரவேற்று பேசிய அவர் : "இது வரியில்லாத பட்ஜெட்; மக்களுக்கு வலி கொடுக்காத பட்ஜெட்; எதிர்தரப்புக்கு வழி கொடுக்காத பட்ஜெட்" என்று பேசியதும் பேரவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு மிகுந்த மதிநுட்பத்தோடு செய்யப்பட்டு இருப்பாதாக கூறியவர், தனது தொகுதி கோரிக்கைகளையும் முன்வைத்தார். மறைமலை அடிகளார் பெயரில் ============================= ஆராய்ச்சி நிலையம் வேண்டும்: தமிழ் வளர்ச்சி துறைக்கு இந்த அரசு அறிவித்துள்ள திட்டங்களையும்,நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர்,இது தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக்காலம். எனவே தனிதமிழுக்கு குரல் கொடுத்த, தமிழ் வரலாற்றின் வைரமாக திகழும் ஐயா.மறைமலை அடிகளார் பெயரால்,அவர் பிறந்த நாகப்பட்டினத்தில் நூலகத்துடன் கூடிய தனித்தமிழ் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழ் அகதிகள் நலன்: ========================= இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக தமிழக அரசு செய்து வரும் திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றவர் ,இது உலகமெங்கும் தேசத்தை கடந்த நதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒர் நற்செய்தி என்று பாரட்டினார். மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் அரசு, ஈழத் தமிழர்கள் மீது
செய்திகள்
திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் உரை …!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளிகூடத்தில் கடந்த 24.07.2016 ஞாயிறு அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . பள்ளி தாளாளர் அலிகான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் . அங்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பள்ளி முதல்வர் தலைமையில் மாணவ – மாணவிகள் வரவேற்பு கொடுத்தனர் . அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது … இளம் வயதிலேயே நாம் எதற்காக படிக்கிறோம் ? எதை நோக்கி படிக்கிறோம் ? என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் . நமது கல்வி மனிதாபிமான சிந்தனைகளையும் , பிறர் நலம் நாடும் எண்ணங்களையும் வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும் . நல்ல பண்புகளுடன் கூடிய கல்விதான் வெற்றியை தரும் . வெறும் மனப்பான இயந்திரங்களாக மாறிவிடக்கூடாது . பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அந்த சிந்தனைகளை ஆசிரியர் – ஆசிரியைகள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும்
தொண்டியில் பேருந்து பணிமனை அமையவேண்டும் ! கருணாஸ் MLA விடம் மஜக வேண்டுகோள் !
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டியில் முன்பு அறிவிக்கப்பட்ட அரசு பேருந்து பணிமனையை தொண்டியிலிருந்து திருவாடானைக்கு மாற்றக்கூடாது என்றும் , அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொண்டியை சேர்ந்த மஜகவினரும் , சமூக ஆர்வலர்களும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களை தொடர்புகொண்டு பேசினர் . இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சந்தித்து , மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA தொண்டி மக்களின் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினார் . இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கருணாஸ்MLA தெரிவித்தார் . மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி தொண்டியில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்தால் , அது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கருணாஸிடம் கோரிக்கை வைத்தார் . - மஜக ஊடகப்பிரிவு
அப்துல் கலாம் ஒரு ஊக்க மருந்து …!
இன்று மேதகு அப்துல் கலாம் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து ஓராண்டாகிறது . அவர் வாழும் காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட , இறந்த பிறகும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் . இன்று அவருடைய முதலாமாண்டு நினைவேந்தல் நாளில் நாடு முழுக்க ஒருவித ஏக்கம் கலந்த சோகம் இழையோடுவதை உணர முடிகிறது. தொலைக்காட்சிகளில் , F.M ரேடியோக்களில் , சமூக இணைய தளங்களில் , இன்று காலை முதல் அவரது நினைவுகள் ஊட்டப்படுகிறது . நாளிதழ்கள் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன . நாடெங்கும் , சிறப்பு கருத்தரங்கள் , நினைவேந்தல் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன . குறிப்பாக பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்த சோகம் மாறாத உணர்வுடன் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் . அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி , தனியார் அலுவலகங்களிலும் அவரது நினைவேந்தல் போற்றப்படுகிறது . கட்சி அரசியல் , சாதி - மத அரசியல் , பிராந்திய அரசியல் என எல்லாவற்றையும் கடந்து அவர் போற்றப்படுகிறார் . காந்திக்கு நிகராக ;
காஷ்மீர் பெண்களை கற்ப்பழிப்பதா தேச பக்தி? திருச்சியை உலுக்கிய மஜகவின் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் ராசுதீன் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தலில் மாலை 4 மணியளவில் மஜவினரும்,பொது மக்களும் திரண்டனர். மஜகவின் அழைப்பினை ஏற்று திரண்ட மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். #காஷ்மீர்_மக்களின்_போராட்டம்__தேசிய_இனத்தின்_போராட்டம் #காஷ்மீர்_பெண்களை_கற்ப்பழிப்பதற்க்கு_பெயர்_தேச_பக்தியா? #காஷ்மீர்_குழந்தைகளை தாக்குவதற்கு_அரச_படைகளுக்கு_அதிகாரமா? மத்திய அரசே...காஷ்மீரில் ராணுவத்தில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்து போன்ற பதாகைகளுடன்,நெருப்பை சுடும் முழக்கங்களும்,வேட்டையாட புறப்புடும் புலிகளின் உறுமலுடன் மஜகவினர் திருச்சி ரயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய படியே காவல்துறை வேண்டுகோளை ஏற்று அனைவரும் கைதாகினர். ஈழத் தமிழர்களும்,காஷ்மீரிகளும்,நாகலாந்து மக்களும்,மணிப்பூர் மக்களும் மனிதநேயத்துடன் காப்பாற்ற படவேண்டும். என்பதே மஜக வின் நோக்கம்.#அதற்காக_எப்போதும்_எழும்_நமது_முழக்கம் தகவல்; மஜக ஊடகப் பிரிவு (திருச்சி)