திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் உரை …!

image

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளிகூடத்தில் கடந்த 24.07.2016 ஞாயிறு அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .

பள்ளி தாளாளர் அலிகான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் . அங்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு பள்ளி முதல்வர் தலைமையில் மாணவ – மாணவிகள் வரவேற்பு கொடுத்தனர் .

அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது …

இளம் வயதிலேயே நாம் எதற்காக படிக்கிறோம் ? எதை நோக்கி
படிக்கிறோம் ? என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் . நமது கல்வி மனிதாபிமான சிந்தனைகளையும் , பிறர் நலம் நாடும் எண்ணங்களையும் வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும் . நல்ல பண்புகளுடன் கூடிய கல்விதான் வெற்றியை தரும் . வெறும் மனப்பான இயந்திரங்களாக மாறிவிடக்கூடாது . பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அந்த சிந்தனைகளை ஆசிரியர் – ஆசிரியைகள் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் .

தோல்விகளும் , தவறுகளும் வீழ்ச்சியல்ல . கற்றலின் ஒரு பகுதி . அதைக் கண்டு துவண்டு விடக்கூடாது . ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவுக்கு அதிபரானார் . 17 தோல்விகளை சந்தித்த பிறகுதான் அவர் வெற்றி பெற முடிந்தது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் .

இவ்வாறு பொதுச் செயலாளர் பேசினார் . இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்ட எழுத்தாளர்களும் , சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர் .

– மஜக ஊடகப்பிரிவு …