கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA அவர்களும், மஜக பொதுச்செயளாலர் தமிமுன் அன்சாரி MLA அவர்களும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சிலை வைத்தது குறித்து ஆட்சேபனை தெரிவித்து கருத்து கூறினார்கள். அபுபக்கரின் கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் மணிகண்டன் அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்றார். அதற்கு தனது உரையில் பதில் சொன்ன மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அப்துல் கலாம் பெயரில் விருதுகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரின் பெயரில் மத்திய அரசு சிலை வைப்பதை ஏற்க முடியாது என்றார். இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை என்றார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் , இதை பொது விவாதமாக மாற்ற வேண்டாமே என்றார். அதற்கு பதில் அளித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "முஸ்லிம்களின் தாய் அமைப்பான ஜமாத்துல் உலமா இதற்கு மாற்று கருத்தினை முன் வைத்துள்ளது" என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார். ஜமாத்துல் உலமா அப்துல் கலாமுக்கு மத்திய அரசு ராமேஸ்வரத்தில் சிலை வைத்ததை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது
செய்திகள்
70-வது சுதந்திர தின வாழ்த்து : பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது கடமை.
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நமது மகிழ்ச்சிக்குரிய ஆகஸ்ட் 15 ம் நாள் மீண்டும் வந்திருக்கிறது. நீண்ட வரலாற்றையும்,தொண்மையான கலாச்சாரத்தையும் கொண்ட நம் இந்திய திருநாடு 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கொள்கையோடு பயணிக்கிறது. நாம்,சுதந்திரத்தின் தென்றலை கடந்த 70 ஆண்டு காலமாக அனுபவிக்கிறோம் எனில், அதற்கு நமது முன்னோர்கள் செய்திட்ட அரும்பெரும் தியாகங்கள்தான் காரணமாகும். ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற போர்களும்,போராட்டங்களும் வரலாற்றில் ஈரம் காயாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கேரளத்தில் குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி வைத்த வீரப்போர் காந்தியடிகளின் தலைமையில்,நேரு,அபுல்கலாம் ஆசாத் போன்றோர் முயற்சிகளில் விடுதலையாக மலர்ந்தது. ஹைதர் அலி,திப்பு சுல்தான்,ஜான்சிராணி லட்சுமி பாய்,தாந்தியா தோபே,இரண்டாம் பகதூர்ஷா,சிராஜுத் தௌலா போன்ற தேசியத்தலைவர்களும், தமிழகத்தில் பூலித்தேவன்,தீரன் சின்னமலை,மருதநாயகம் என்னும் யூசுப்கான்,கட்டபொம்மன்,வீரன் சுந்தரலிங்கம் போன்ற நாயகர்கள் முன்னெடுத்த சுதந்திர போர்கள் சிலிர்ப்பூட்டக்கூடியவை. இதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய நவீன சுதந்திர போர் ஒரு தனி வரலாறாகும். நாம் 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நமது முன்னோர்களின் தியாகங்களை போற்றுவோம் ! அவர்கள் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே நமது இன்றைய கடமை என்பதை உணர்வோம். மதவாத அச்சுறுத்தல்,சாதிய மேலாதிக்கம், பயங்கரவாதம்,ஊழல்,பன்னாட்டு மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக
விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மஜக சார்பில் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா பங்கேற்பு…
ஆக.13., இன்று விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். தகவல் : மஜக ஊடகபிரிவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா…
ஆகஸ்ட்-15 இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
குவைத் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய சுதந்திர இந்தியா கருத்தரங்கம்…
ஆக.13.,குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* 12/08 2016 (வெள்ளி) அன்று முர்காப் அலி டவரில் *வள்ளல் ஹபீப் முஹம்மது அரங்கத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை *மண்டல செயலாளர் முத்துகாபட்டி ஹாஜாமைதீன்* அவர்கள் தலைமை ஏற்க்க *மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ்* அவர்கள் தொகுத்து வழங்கினார், ஆரம்பமாக *புத்தாநத்தம் கான் இக்பால் ஃபாஜில் மன்பயி* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க *மண்டல து. செயளாலர் சகோ. அதிரை பைசல் அஹமது* அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் முன்னிலையாளர்களாக *சகோ. Dr. S.M. ஹைதர் அலி அவர்கள் (TVS HYDER GROUP),* சகோ. *M.சாதிக்* அவர்கள் (லிட்டில் இந்தியா புரோமோட்டர்ஸ்), *சகோ. A.J. மத்தினுல்லாஹ்* அவர்கள் (ARIYAFAL-KHALEEJ GROUPS), *சகோ. M.Y.முகம்மது கவுஸ்* அவர்கள் (வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்), *சகோ. M.சாஹின் ஷா* அவர்கள் (NQG சமூக ஆர்வலர்), *சகோ. S. சாதிக்* அவர்கள் (அல் அவ்தா தச்சுப்பட்டறை), *சகோ. H.முஷாவுதீன் (மண்டல ஆலோசகர் மஜக)* ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கழக பேச்சாளர்கள் உரையாற்றினர் இதை தொடர்ந்து குவைத்தில் இயங்ககூடிய