கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA அவர்களும், மஜக பொதுச்செயளாலர் தமிமுன் அன்சாரி MLA அவர்களும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சிலை வைத்தது குறித்து ஆட்சேபனை தெரிவித்து கருத்து கூறினார்கள்.
அபுபக்கரின் கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் மணிகண்டன் அப்துல் கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்றார். அதற்கு தனது உரையில் பதில் சொன்ன மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அப்துல் கலாம் பெயரில் விருதுகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரின் பெயரில் மத்திய அரசு சிலை வைப்பதை ஏற்க முடியாது என்றார். இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை என்றார்.
அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் , இதை பொது விவாதமாக மாற்ற வேண்டாமே என்றார். அதற்கு பதில் அளித்த தமிமுன் அன்சாரி MLA அவர்கள் “முஸ்லிம்களின் தாய் அமைப்பான ஜமாத்துல் உலமா இதற்கு மாற்று கருத்தினை முன் வைத்துள்ளது” என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார்.
ஜமாத்துல் உலமா அப்துல் கலாமுக்கு மத்திய அரசு ராமேஸ்வரத்தில் சிலை வைத்ததை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடதக்கது.
தகவல் : மஜக ஊடகபிரிவு