மார்ச்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம் மலையாளத்தான் பட்டியில் மாவட்ட செயலாளர் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பிறகு தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி அவர்களின் இல்லத்திற்குச் சென்ற பொதுச்செயலாளர் அவர்கள் அவரின் பாட்டி, இறப்புக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தகடை பாருக், புதூர் கனி , மாவட்ட துணைச் செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், சுலைமான், ஜாபர், இளைஞரணி மாவட்ட செயலாளர் சையது அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் சோனை, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING மதுரை மாவட்டம் 03.03.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக வேதை நகர்மன்ற உறுப்பினர் பதவியேற்பு !!
வேதை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் அகமதுல்லா அவர்களின் மனைவி A.அனிஸ் பாத்திமா அவர்கள் வெற்றி பெற்று வேதை நகர மன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதில் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING மஜக நாகை மாவட்டம்
மஜக திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர் பதவியேற்பு !!
நாகை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக திட்டச்சேரி 9 வது வார்டு பேரூராட்சிஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் அவர்கள் வெற்றி பெற்று இன்று திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினராக பதவியேற்றார். இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஸ்வான், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், கலீல், சாகுல், யூசுப், சேக், ராசிம், ஜமால், சலாவுதீன், முஜாமில் மற்றும் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING மஜக நாகை மாவட்டம்
மஜக நாகை நகரமன்ற உறுப்பினர் பதவியேற்பு !!
நாகை. மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை 29 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா@ சாகுல் ஹமீது அவர்களின் தாயார் M.ஜென்னத் பேகம் அவர்கள் வெற்றி பெற்று இன்று நாகை நகரமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட நிர்வாகிகள் சதக்கத்துல்லா, ரெக்ஸ் சுல்தான் நகர நிர்வாகிகள் அஜிஜுர் ரஹ்மான், அமீர்தீன், அப்துல் செல்லத்துரை, மூசா, ரிபாய், அனிஸ், மஞ்சை சாதம் உள்ளிட்டடோர் மற்றும் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING மஜக நாகை மாவட்டம்
கட்டிமேடு ஆதிரெங்கத்தில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா.! கொடியேற்றும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று அன்பளிப்பு முப்பெரும் விழா..!
திருவாரூர்.மார்ச்.01., மஜகவின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு &ஆதிரெங்கம் கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று அன்பளிப்பு என முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா. BE தலைமையில் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அசீம் அலீம் வரவேற்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் முதற்கட்டமாக கொடியேற்றும் நிகழ்ச்சி கட்டிமேடு பள்ளிவாசல் அருகில் துபை மண்டல செயற்குழு உறுப்பினர் நானா @ மைதீன் அப்துல் காதர் அவர்களும் ஆதிரெங்கம் சேவை மையம் அருகில் கட்சியின் மூத்த உறுப்பினர் பெரிய தம்பி @ சாகுல் ஹமீது அவர்களும் மஜக கொடியை ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியின் அடுத்த பகுதியாக இமாம்கள் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மீன் விற்பனையாளர்களும் அன்னகூடையும் வழங்கப்பட்டது . கட்டிமேடு & ஆதிரெங்கம் ஊராட்களில் வேலை பார்க்கும் சுமார் 15 தூய்மை பணியாளர்களுக்கு 5Kg அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதிபகுதியாக ஆதிரெங்கம் ஊராட்சி தலைவர் வீரசேகரன்.DEEE பொதுமக்களுக்கு அனைவருக்கும் மரக்கன்றுகள் அன்பளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், சவூதி மண்டல துணை செயலாளர் பங்குராஜ்,