32 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பேரறிவாளன் தரப்பின் நியாயங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. நீண்ட பல வருடங்களாக நடந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்நிலைபாடு தண்டனை காலத்தை கடந்து சிறையிருளில் தவிக்கும் சிறைவாசிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. தோழர்.பேரறிவாளனுக்கும், அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் , இச்சட்டப் போராட்டத்தில் துணை நின்றவர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 09.03.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை, கத்தார் மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளராக, உபைஸ் கரீம் DEEE, த/பெ; உஸ்மான் அலி, அலைப்பேசி: +974 3039 1095, +91 9655832979 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 08.03.2022
தைக்காலில் மஜக 7ம் ஆண்டு துவக்க விழா!
கொள்ளிடம்.மார்ச்:06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் தைக்காலில் (துளசேந்திரப்புரம்) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட துணை செயலாளர் தைக்கால் அசேன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் அவர்கள் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கொள்ளிடம் ஒன்றிய துணை செயலாளர் அன்சர் அலி அவர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினார் இந்நிகழ்வில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது,கிளை செயலாளர் ஷேக் முஹம்மது,முருகன்,இப்ராகிம் ஷா,ராஜ்குமார், அஹமது பாஷா,சுரேஷ்,ஆமீன்,மாரியப்பன்,ஜாஹிர் உசேன் மற்றும் கிளை நிர்வாகிகள்,செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING மயிலாடுதுறை மாவட்டம் 06.03.2022
காயல்பட்டினத்தில்,மஜக 7ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி..!5இடங்களில் கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.,
தூத்துக்குடி_மார்ச்:06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தூத்துக்குடி புறநகர் மாவட்டம் காயல்பட்டினம் நகர மஜக சார்பில் ஐந்து இடங்களில் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் இப்னுமாஜா அவர்கள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப் பொருளாளர் ராசுகுட்டி துணைச் செயலாளர் மீராசாஹிப் நகர பொருளாளர் மீரான் கட்சியின் மூத்த உறுப்பினர் சேக் அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்று ஐந்து இடங்களில் கட்சியின் கொடிஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நகர நிர்வாகிகள் இர்ஷாத், சம்சுகனி, ஜிபுரி உள்ளிட்ட மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர் . தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING தூத்துக்குடி புறநகர் மாவட்டம் 06.03.2022
வேலூரில்,மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி..!
மார்ச்:04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக, கஸ்பா பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டு மஜகவில் புதியதாக இணைந்த சகோதரர் ராம் அவர்களால் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இரண்டாவதாக, கொணவட்டம் பகுதியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன் அவர்களும், மூன்றாவதாக R N பாளையம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் சையது உசேன் அவர்களும் கட்சி கொடியை ஏற்றினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் கஸ்பா ஏஜாஸ், மாவட்ட இ அணி துணைசெயலாளர் சாதிக், ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், வசீம் அக்ரம் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING வேலூர் மாவட்டம் 04.03.2022