ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழக மக்களிடையே சேவையாற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) நிர்வாகிகளின் கலந்துரையாடலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். கொரணா காலக்கட்டத்தில் MKP யினர் ஆற்றிய மனிதநேய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தாயகத்திலிருந்து வருபவர்களுக்கு வேலை வாங்கி தருவது, மருத்துவ சேவைகளை ஆற்றுவது , மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது, தமிழ் மொழி பண்பாடுகளை வளர்த்தெடுப்பது ஆகியவற்றில் MKPயினர் ஆற்றி வரும் சேவைகள் மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார். இந்நிகழ்வுக்கு அமீரக மண்டல செயலாளர் நாச்சிக்குளம் A. அசாலி அகமது தலைமை தாங்கினார். அபுதாபி, துபை, ஷார்ஜா, அல் அய்ன் மாநகர நிர்வாகிகளும், அமீரக மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று கலந்துரையாடினர். அமீரக வாழ் தமிழர்களிடையே பத்திரிக்கை மற்றும் நூல் வாசிப்பை அதிகப்படுத்த முயல வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 9 அன்று துபையில் இப்தார் நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அமீரக மண்டல பொருளாளர் H.அபுல் ஹஸன் நன்றியுரையுடன் தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவேறியது. தகவல், தகவல் தொழில்நுட் _அணி, mkp-it-wing அமீரகம் 13.03.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக மாபெரும் கண் மருத்துவ முகாம்.!
மார்ச்.13.,மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம், பேட்டை நகரம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இன்று நடைபெற்றது. பேட்டை நகரத்தின் 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மன்சூர் MC., அவர்கள் முகாமை துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியன் MC., திரு.அல்லாபிச்சை MC., திருமதி.ராஜேஸ்வரி MC., திரு.மாரியப்பன் MC., உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வேல்பாண்டியன், R.R.ரபீக், NTL கனி, விசிக பேட்டை யாசிர் உள்ளிட்டோர் முகாமை நேரில் பார்வையிட்டு வாழ்த்தினர். முகாம் ஒருங்கிணைப்பை மஜக நிர்வாகிகள் முத்துக்குமார், முருகேசன், அப்பாஸ், புகாரி, டில்லிசம்சு, ஹபிபுல்லாஹ், ஐடிஐ.சங்கர், அசன்கனி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பீடி தொழிளாளர்கள், அமைப்புசாரா தொழிளாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING நெல்லை மாவட்டம் 13-03-2022
நாகர்கோவில் மாநகராட்சி மேயரை சந்தித்து மஜக நிர்வாகிகள் வாழ்த்து.!
மார்ச்.12.,நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் திரு. R. மகேஷ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் இன்று சந்தித்து சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட துணைச்செயலாளர் அமீர் கான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முகமது அஸீம், மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர துணை செயலாளர் செய்யது முஹம்மது , ஷெரிப், உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING கன்னியாகுமரி மாவட்டம் 11.03.2022
MJTS நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின், கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டப் பொருளாளராக M.சமீர்அலி த/பெ; சலீம் 29/A 177E, மதீனா நகர், சாரமேடு கரும்புக்கடை, கோவை- 641008 அலைப்பேசி:9843025818 மாவட்ட துணைச் செயலாளராக, M.முகம்மது பாருக் த/பெ; முகம்மது ஹனிபா நெ.6/2 K.M.காலனி, ஆத்துப்பாலம், கோவை- 641023 அலைப்பேசி:9843775591 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. இவண், MH.ஜாபர்அலி மாநில செயலாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 11.03.2022
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக, I.முகம்மது அசாருதீன் த/பெ இலியாஸ் நெ.2/578 ராயல் ஹவுசிங் குரும்பனூர் ரோடு மேட்டுப்பாளையம் அலைபேசி:9655861162 மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளராக, A.முகமது இர்பான் த/பெ K.அப்துல் ரஹ்மான் நெ.76/120 , சத்திமூர்த்தி நகர், மேட்டுப்பாளையம் அலைபேசி: 9524255360 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய_ஜனநாயக_கட்சி 10.03.2022