மார்ச்.13.,மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம், பேட்டை நகரம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இன்று நடைபெற்றது.
பேட்டை நகரத்தின் 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மன்சூர் MC., அவர்கள் முகாமை துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியன் MC., திரு.அல்லாபிச்சை MC., திருமதி.ராஜேஸ்வரி MC., திரு.மாரியப்பன் MC., உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வேல்பாண்டியன், R.R.ரபீக், NTL கனி, விசிக பேட்டை யாசிர் உள்ளிட்டோர் முகாமை நேரில் பார்வையிட்டு வாழ்த்தினர்.
முகாம் ஒருங்கிணைப்பை மஜக நிர்வாகிகள் முத்துக்குமார், முருகேசன், அப்பாஸ், புகாரி, டில்லிசம்சு, ஹபிபுல்லாஹ், ஐடிஐ.சங்கர், அசன்கனி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பீடி தொழிளாளர்கள், அமைப்புசாரா தொழிளாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
நெல்லை மாவட்டம்
13-03-2022