You are here
Home >

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழக மக்களிடையே சேவையாற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) நிர்வாகிகளின் கலந்துரையாடலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
கொரணா காலக்கட்டத்தில் MKP யினர் ஆற்றிய மனிதநேய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தாயகத்திலிருந்து வருபவர்களுக்கு வேலை வாங்கி தருவது, மருத்துவ சேவைகளை ஆற்றுவது , மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது, தமிழ் மொழி பண்பாடுகளை வளர்த்தெடுப்பது ஆகியவற்றில் MKPயினர் ஆற்றி வரும் சேவைகள் மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வுக்கு அமீரக மண்டல செயலாளர் நாச்சிக்குளம் A. அசாலி அகமது தலைமை தாங்கினார்.
அபுதாபி, துபை, ஷார்ஜா, அல் அய்ன் மாநகர நிர்வாகிகளும், அமீரக மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று கலந்துரையாடினர்.

அமீரக வாழ் தமிழர்களிடையே பத்திரிக்கை மற்றும் நூல் வாசிப்பை அதிகப்படுத்த முயல வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் ஏப்ரல் 9 அன்று துபையில் இப்தார் நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அமீரக மண்டல பொருளாளர் H.அபுல் ஹஸன் நன்றியுரையுடன் தேனீர் விருந்துடன் நிகழ்வு நிறைவேறியது.

தகவல்,
தகவல் தொழில்நுட் _அணி,
mkp-it-wing
அமீரகம்
13.03.2022

Top