டிச.08, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து கோவை இரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தை தொடக்கி வைத்து துணை பொதுச் செயலாளர் சுல்தான்அமீர், கொள்கை விளக்க அணி மாநில துணைச்செயலாளர் கோவை நாசர் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜக வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் படுத்து மஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், பாருக், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி, கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்தில் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு திரளான மஜகவினர் பங்கேற்போடு இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கோவை_மாநகர்_மாவட்டம்.
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நெல்லை மஜகவினர் போராட்டம்…! மாட்டு வண்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்!
நெல்லை.அக்.04., விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் கறுப்பு சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த 25-09-2020 முதல் 02-10-2020 வரை தொடர் போராட்டங்களை நடத்தியது. ஒதன் ஒரு நிகழ்வாக நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பேட்டை நகர பொருளாளர் D.அசன்கனி தலைமை தாங்க, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேட்டை நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்டம் செயலாளர் கரிசல்சுரேஷ், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, விவசாய சங்க தலைவர் S.முத்துமாரி, மஜக மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டத்தால் ஏற்பட உள்ள ஆபத்துகள் குறித்தும் உரையாற்றினர். இப்போராட்டத்தில் மஜகவினர் பலர் மாட்டு வண்டிகளில் ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பேட்டை நகர மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் நன்றியுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் பேட்டை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் N.அப்பாஸ், MJTS
கடலூர் பண்ருட்டியில் வேளாண் சட்டங்களை கண்டித்து மஜகவினர் போராட்டம்!
அக்.03, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் ஹாஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இப்போராட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் அஜீஸ், அணி நிர்வாகிகள் சதாம், ஹலில் ரஹ்மான், மற்றும் பண்ருட்டி அஜீஸ், கடலூர் மன்சூர் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம்.
கீழ்வேளூர் தொகுதி திருப்பூண்டியில் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கெதிராக மஜக போராட்டம்.
அக்.02, மத்திய பாஜக அரசின் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள வேதை, நாகை சட்டமன்ற தொகுதிகளில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஒருவார கால போராட்டத்தின் இறுதி நாளான இன்று கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மஜக சார்பில் திருப்பூண்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்பதை விளக்கி மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், சிபிஐ ஒன்றிய செயலாளர் D.செல்வம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் கண்டன முழக்கங்களை எழுப்பினார். மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி. செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லா, துணை செயலாளர் சபுருதீன், அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், நாகூர் ஜாஹீர், நாகை ஜாஸீம், ரெக்ஸ் சுல்தான், R.M.அக்பர், முபீன், ரியாஸ், மாணவர் இந்தியா பாசித் ஆகியோர் முன்னிலை வகிக்க கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். இதில் திருப்பூண்டி நிர்வாகிகள் ஹாஜா மொய்னுதீன், சுலைமான், அலி, சாகுல், பாரக், ஜுபைர், உகாசா மற்றும் சமூக ஆர்வலர்களும், விவசாய சங்க பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்
வேளாண் ௧றுப்பு சட்டங்களுக்கு எதிராக வடசென்னையில் மஜக வினர் போராட்டத்தில் ஈடுடடட்டனர்.! மஜக மாநில செயலாளர் சீனிமுகம்மது துணைசெயலாளர் சமீம் அஹமது ஆகியோர் பங்கேற்பு.!
சென்னை.அக்டோபர்.02., மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச்செயலாளர் தாரிக் முகமது தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆர்.கதிர் உசேன், அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக மாநிலச் செயலாளர் சீனி முஹம்மது, மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட துணைச் செயலாளர் ரசீது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மவுலானா, வட்ட செயலாளர் ஜல்லியில் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_கிழக்கு_மாவட்டம் 02-10-2020