கடலூர் பண்ருட்டியில் வேளாண் சட்டங்களை கண்டித்து மஜகவினர் போராட்டம்!


அக்.03,
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் ஹாஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இப்போராட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் அஜீஸ், அணி நிர்வாகிகள் சதாம், ஹலில் ரஹ்மான், மற்றும் பண்ருட்டி அஜீஸ், கடலூர் மன்சூர் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.