விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! தூத்துக்குடி மாவட்டத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! மாநில துணை செயலாளர் AR சாகுல்ஹமீது பங்கேற்பு!!


அக்டோபர்.03.,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் மாவட்ட விவசாய அணி செயலாளர் குருகை ஜெயசீலன் , அவர்கள் தலைமையில் மஜக மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது நஜிப், ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணைச் செயலாளர் A.R. சாகுல் ஹமீது , மஜக மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாஹிப், மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், மஜக கொள்கை விளக்க பேச்சாளர்S.J.சாதிக், விசிக இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் விடுதலை செழியன், ஆம்ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குனசீலன் வேலன், ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச் சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசிர் ராஜ்குமார் அவர்கள் நன்றியுரை யாற்றினார்.

திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், திருவை குண்டம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மீரான், அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட மஜக
கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
02.10.2020