மஜக கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் திறப்பு விழா..!

ஜனவரி.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஆசனூர் ரோடு சந்தப்பேட்டையில்
மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் S.ஜாவித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவிலூர் நகர செயலாளர் S.சாதிக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர் A.அப்துல்லா மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் K.பயாஸ் ஆகியோர் முன்னிலையில் அலுவலக திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் , திருக்கோவிலூர் சுன்னத் ஜமாத் தலைவர் இப்ராஹிம், நகர செயலாளர் s.சாதிக் பாஷா, நகர பொருளாளர் B. ஜாகிர் உசேன், நகர இளைஞரணி செயலாளர் சர்தார், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் s.ஷாருக், நகர மாணவர் இந்தியா செயலாளர் s.அசார் , ஊர் ஜாமத்தார்கள் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
26.01.2022