
ஜன:26., 73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து மஜக தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் கோணுழாம்பள்ளத்தில் தேசிய கொடியேற்று விழா நடைப்பெற்றது.
அதன் ஒரு நிகழ்வாக கிளை செயலாளர் நவாஸ் அவர்கள் தலைமையில் ஊர் நாட்டாமை நஜீபுதீன், மாலிக், இமாம். தைய்யிபு, அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார். அதை தொடந்து தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், குவைத் மண்டல துணை செயலாளர் அன்சாரி ஆகியோர் அனைவருக்கும் பழங்கள். இனிப்புகள் வழங்கினர்.
தொடர்ந்து மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை எழுப்ப அனைத்து மஜகவினரும் உறுதிமொழி கோஷத்தை எழுப்பினார்கள்.
இந்நிகழ்வில் ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் உபைத்துல்லாஹ் ஜமாத்தார்கள், நிர்வாகிகள்,மற்றும் பல்வேறு தோழமை கட்சியினரும் மஜக கிளை உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
26.01.2022