You are here

உள்ளாட்சி தேர்தலில் மஜக நிலைப்பாடு! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் நிலைபாடு குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று காணொளி வழியே நடைப்பெற்றது.

மிக குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவாக கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் மஜகவினர் தங்களது விருப்ப மனுக்களை மாவட்டங்களை நிர்வாகிக்கும் மேலிட பொறுப்பாளர்களிடம் வழங்க வேண்டும்.

2. தனித்துப் போட்டியிடுவது அல்லது உள்ளுர் / வட்டார அளவில் தேர்தல் உடன்பாடு காண்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை மாவட்ட நிர்வாக குழுவுக்கு வழங்குவது

3. பாஜக அங்கம் பெறும் கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்ற நிலைபாட்டை இத்தேர்தலிலும் கடைபிடிப்பது.

4. தேர்தல் பணிகளை ஒழுங்குப்படுத்த துணைப் பொதுச் செயலாளர் தைமியா, அவர்களை தலைவராகவும், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் . தாஜ்தீன், அவர்களை துணைத் தலைவராகவும் கொண்ட ஒரு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுவது என்றும் இக்குழு தேர்தல் பணிகளை கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இம்முடிவுகளின்படி மனிதநேய ஜனநாயக கட்சி இத்தேர்தல் களத்தை சந்திப்பது என்று முடிவெடுத்திருக்கிறது.

பொதுமக்களின் அன்றாட வாழ்வியல் குரலை தீர்த்துடும் வாய்ப்பை இத்தேர்தல் வழங்குவதால் ஜனநாயக வழியில் நேர்மையாக இக் களத்தை அனைத்து கட்சியினரும் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
27.01.2022

Top