கடலூர் நெல்லிக்குப்பத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!


அக்.03,
வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது.

மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், அணி நிர்வாகிகள் சதாம், ஹலில் ரஹ்மான், நெய்வேலி பாபர், நகர செயலாளர் அப்துல் அஜீஸ், பொருளாளர் ரியாசத் அலி, துணை செயலாளர்கள் சாதிக், பகுதாத், பாஸித், நகர அணி நிர்வாகிகள் முஸ்டாக், சதாம் உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.