திருவள்ளூர்.அக்.03.,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் TNHB வீட்டுவசதி வாரியத்தில், பல்லாயிரக்கணக்கானோர் குடியிருக்கும் பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் நிர்வாகத்தால் பாருடன் கூடிய மதுபான கடையை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டு வேலைகள் அனைத்தும் முடிந்து கடை திறப்பதற்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்தக் கடை அமைந்தால் குடியிருப்பு வாசிகளுக்கும், அதை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கும் அலுவலகம் செல்லும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளையும் குற்ற சம்பவமும் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளதை அறிந்து,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் அவசர ஆலோசனை செய்து களத்தில் இறங்கி உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் ஆன்லைன் மூலமாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மஃபா.பாண்டியராஜன் அவர்களையும்,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு.நாசர் அவர்களையும், ஆவடி காவல் உதவி ஆணையர், கலால் உதவி ஆணையர், ஆவடி வட்டாட்சியர், ஆவடி T-6 காவல்நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மஜகவின் இந்த தொடர் முயற்சியால் ஆவடி TNHB குடியிருப்பு பகுதியில் வரவிருந்த டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஜகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
02-10-2020