டிச.13., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 12.12.2020 அன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.எம்.அக்பர், அவர்கள் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திருப்பூண்டி கிளை செயலாளர் முகம்மது அலி, அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் முஹம்மது சபூருதீன், அசரப் அலி, ஒன்றிய செயலாளர், அப்துல் அஜீஸ் ஒன்றிய துணை செயலாளர், அப்துல் ரஹ்மான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், தெத்தி ஆரிப், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் மஞ்சை சதாம், மற்றும் சுலைமான், பராக், ஜுபைர், ஜியாவுதீன், VM.ஜெக்கரியா, அருள் நிலவன், மற்றும் கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 12.12.2020
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
திருச்சியில் காவிரி உரிமை மீட்புகுழு சார்பாக ரயில் மறியல் போராட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!
டிச.13., காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் டெல்டா மாவட்டம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கவித்துவன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பானுமதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேரா.மைதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களின் தீமைகள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அவரின் உரை நிறைவடைந்ததும் போராட்டத்தில் பங்கேற்ற தோழமை கட்சியினரும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தங்களின் உரை மிகவும் உருக்கமாக இருந்தது என்றும், தெளிவான முறையில் இதை எடுத்துரைத்ததாகவும் பாராட்டினர். இதில் மஜக வின் சார்பில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, சையது முஸ்தபா, அந்தோணி ராஜ், ஷேக் அப்துல்லாஹ், அப்துல் ரஹீம், திருச்சி சேட், முஹம்மது நாசர், அன்வர் பாஷா, ஷாஜஹான் மற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள்,
பெரம்பலூரில் சோளக்கதிரை கையிலேந்தி மஜகவினர் போராட்டம்..!
பெரம்பலூர்.டிச.13., டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயத்தை அழிக்கத் துடிக்கும் வேளாண்மை கறுப்பு சட்டங்களை எதிர்த்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று (12-12-2020) போராட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக மஜக பெரம்பலூர் மாவட்ட விவசாய அணி சார்பாக லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சோளக் கதிரை கையில் ஏந்தியும், பச்சை நிற முண்டாசு கட்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம் 12-12-2020
நாகையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜக போராட்டம் திரளானோர் பங்கேற்பு!
டிச.13., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 12.12.2020 அன்று நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று இப்போராட்டத்தை முன்னெடுத்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அன்வர்தீன்,அவர்கள் தலைமை தாங்கினார், குவைத் மண்டல துணை செயலாளர் பாசில் கான், தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் பகுருதீன், ச.தமிமுன் அன்சாரி, ஆதினங்குடி சாகுல், பிரவின், உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் அசார், யாசின், மற்றும் திட்டச்சேரி நகர செயலாளர் இப்ராகிம், நாகூர் நகர பொருளாளர் சாகுல், ஆகியோர் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், நன்றியுரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட அணி நிர்வாகிகள் , திட்டச்சேரி, நாகூர் நகர நிர்வாகிகள் மற்றும் ஆதலையுர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், ஆதினங்குடி, திருமருகல், வவ்வாலடி, கோட்டூர், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும்
மயிலாடுதுறையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜகவினர் போராட்டம்!
டிச.13., டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை முன்னிட்டு 12.12.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வானதி ராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று இப்போராட்டத்தை முன்னெடுத்தது. போராட்டத்திற்கு வானதி ராஜபுரம் முஸ்லிம் புதுத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் A.நூர் முஹம்மது தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட செயலாளர் Y.H.ஹாஜா சலிம் தொகுப்புரையாற்றினார். இதில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட துணை துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜகான், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக குத்தாலம் ஒன்றிய செயலாளர் முருகப்பா, வானதி ராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழ்அரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர், கடலங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜிவானந்தம், காங்கிரஸ் பிரமுகர் நாகராஜ், ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாவட்ட துணை செயலாளர் நீடூர் மிஸ்பாஹுதீன், தகவல் தொழில்நுட்ப அணி நகர செயலாளர் குர்சித் கான், வானதி ராஜபுரம் கிளை பொருப்பாளர்கள் சபியுதீன், ஹாஜா மைதீன், ஜியாவுதீன், தமிஜிதீன், முஹம்மது