டிச.13.,
காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் டெல்டா மாவட்டம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் கவித்துவன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பானுமதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேரா.மைதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களின் தீமைகள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவரின் உரை நிறைவடைந்ததும் போராட்டத்தில் பங்கேற்ற தோழமை கட்சியினரும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தங்களின் உரை மிகவும் உருக்கமாக இருந்தது என்றும், தெளிவான முறையில் இதை எடுத்துரைத்ததாகவும் பாராட்டினர்.
இதில் மஜக வின் சார்பில் நிர்வாகிகள் முகமது பீர்ஷா, சையது முஸ்தபா, அந்தோணி ராஜ், ஷேக் அப்துல்லாஹ், அப்துல் ரஹீம், திருச்சி சேட், முஹம்மது நாசர், அன்வர் பாஷா, ஷாஜஹான் மற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள், திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
12.12.2020