ஜனவரி 26, இன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலிசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், வலதுசாரி மதவெறியர்களின் ஊடுறுவலை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்ற இப்போராட்டம் 2 மணி நேரத்தில் திட்டமிடப்பட்டு நடந்தேறியது. மஜக விவசாய அணியினர் தேசிய கொடியும், மஜக கொடியும் கட்டப்பட்ட டிராக்டருடன் வந்து சாலையை மறித்தனர். அவர்களுடன் தொண்டர்களும் களத்தில் திரண்டனர். தேசிய கொடிகளையும், மஜக கொடிகளையும் ஏந்தி மஜக வினர் ஆர்ப்பரித்தனர். சற்று நேரத்தில் மூன்று திசைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாலையோரம் திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அப்பகுதி பரபரப்பானது. மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகவும், அரச வன்முறைகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு வாழ்த்து கூறியும் எழுப்பப்பட்ட முழக்கங்கள் ECR சாலையை அலற வைத்தது. பிறகு சாலையில் செல்லும் மக்கள் நலன் கருதி 15 நிமிடங்களில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் அவர்கள், பிரதமர் மோடியின் பிடிவாத போக்கை கண்டித்தார். விவசாயிகளின் போராட்ட உணர்வுகளை மதித்து சர்ச்சைக்குரிய
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
நீலகிரியில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜகவினர்! காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு! திரளானோர் கைது!
நீலகிரி :டிச.30., மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகையில் ரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமை தாங்கினார். மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித்ஜாபர், மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட பொருளாளர் காலிப், நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்பாஸ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜக வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மஜக வினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது, அப்துல், ரிஸ்வான், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரவி வர்மா, கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர், கோவை மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா
திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் வயலில் இறங்கி மஜகவினர் போராட்டம்! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!!
டிச.27, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு-ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக டெல்லியில் உயிர்தியாகம் செய்த விவசாயிகளின் படங்களை ஏந்தி வயலில் இறங்கி போராட்டம் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைப்பெற்றது. கண்டன முழக்கத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்து மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்கள் சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி உரையாற்றினார். மேலும், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா BE அச்சட்டத்தை கண்டித்து பேசினார். இப்போராட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா வெள்ளசாமி, ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் உள்பட திமுக, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு மஜகவின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். இதில், மஜக மாவட்ட IT Wing செயலாளர் முகமது ஆசிப், நகர செயலாளர்கள் பசீர் அகமது, முகமது தௌபிக் முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர் ஆசீம் அலிம் வரவேற்க கட்டிமேடு கிளை செயலாளர் முகமது ஆசிப் நன்றி தெரிவித்தார். இதில் நாச்சிக்குளம் ரியாஸ் அகமது உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
மீமிசலில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக நூதன போராட்டம்!
டிச.26, மனிதநேய ஜனநாயக கட்சி ஆவுடையார் கோவில் ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மீமிசலில், மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் பேரை.அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் முனைவர்.முபாரக் அலி, பொருளாளர் சேக் இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் பங்கேற்ற மஜகவினர் தலையில் படுக்கையை சுமந்தவாறு கண்டன முழக்கங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன், MJTS மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி, MJVS பொருளாளர் முகம்மது அன்சாரி, மாவட்ட அணி நிர்வாகிகள் முகம்மது அல்காப், அப்பாஸ், அப்துல் ரஹிம், சீனிவாசன், செய்யது அபுதாஹிர், சம்சுதீன், நூர் முகம்மது, சுந்தர் ராஜன், மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள் இமாமுதீன், யாகூப் உசேன், முகம்மது சாலிகு, சதாம் உசேன், படிக்காசு உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை முற்றுகை..!மஜக மாநிலச்செயலாளர் தாஜூதின் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்று கைது..!
சென்னை.டிச.18., மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஆதரித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முன்னதாக இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் பங்குபெறும் என்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவித்திருந்தார். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின் தலைமையில் மஜகவினர் திரளாக பங்கேற்றனர். P.R. பாண்டியன், விக்ரமராஜா உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களுடன் மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷபி, சையத் அப்ஸர், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி.சலாம், மீனவரணி மாநில செயலாளர் பார்திபன், MJTS மாநில தலைவர் பம்மல் சலீம், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் அகமது ஆகியோரும் பங்கேற்று கைதாகினர். மேலும் தென்சென்னை (கி) மாவட்ட செயலாளர் அப்துல் கையூம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப்