நீலகிரி :டிச.30.,
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகையில் ரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமை தாங்கினார்.
மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித்ஜாபர், மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட பொருளாளர் காலிப், நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்பாஸ், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜக வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மஜக வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஹமீது, அப்துல், ரிஸ்வான், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரவி வர்மா, கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர், கோவை மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் மன்சூர், உதகை நகரச் செயலாளர் பிரோஸ், மற்றும் குன்னூர் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
30.12.2020