டிச.30,
இதுவரை இல்லாத அளவில் மிக எடை குறைவான சாட்டிலைட்டை தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த மாணவர் ரியாசுதீன் கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அவரது இந்த சாட்டிலைட்டை அமெரிக்காவின் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சி கூடமான ‘நாசா’ இந்தாண்டு விண்ணில் ஏவவிருக்கிறது.
இதற்காக உலகமெங்கிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இச்சாதனையை புரிந்த அவரை இன்று தஞ்சை மாநகர மாவட்ட மஜக செயலாளர் அகமது கபீர் தலைமையில் மஜகவினர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினர்.
அப்போது பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அலைபேசியில் அவரிடமும் அவரது பெற்றோரிடமும் பேசினார்.
சமூகம், மொழி, நாடு என அனைத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலக சாதனை படைத்ததற்காக வாழ்த்துவதாக கூறிய பொதுச் செயலாளர் அவர்கள், தங்களின் ஆய்வு பயணத்திற்கும், முன்னேற்றத்திற்கும் என்றும் துணை நிற்போம் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில், திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ)ஹபீப் ரஹ்மான், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, துணை செயலாளர் சாகுல் ஹமீத், வார்டு செயலாளர் முஹம்மது காமில் மற்றும் மஜகவினர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.