புதுகை.பிப்14., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய செயலாளர் அரசர்குளம் சேக் அப்துல்லாஹ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்தார்கள் - இன்னாலில்லாஹி .... அவர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் விபத்து உதவி தொகை இரண்டு லட்சம் ரூபாய் -க்கான காசோலையை சேக் அப்துல்லாஹ்- வின் இரண்டு பெண் பிள்ளைகளிடம் மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தை முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசர்குளம் சேக் இஸ்மாயில் ஆகியோர் ஒப்படைத்தார்கள். இதற்காக முயற்சி எடுத்து உதவி தொகை கிடைக்க வழிவகை செய்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி , மாவட்ட ஆட்சித்தலைவர் கனேஷ், மஜக மாவட்ட செயலாளர் துரை முகம்மது மற்றும் அறந்தாங்கி கோட்டாச்சியர் ஆகியோருக்கு சேக் அப்துல்லாஹ்-வின் தந்தை முத்தலிப் நன்றி தெரிவித்தார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) புதுக்கோட்டை மாவட்டம். 14.02.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகை தொகுதி மக்களுக்கு நன்றி!
நாகை.பிப்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி நாகப்பட்டினம் தொகுதி மக்களின் எண்ண ஓட்டங்களை அறிய கருத்துகேட்பு நடத்தினோம். எதிர்பாராத வகையில் படிவங்கள் அனைத்தும் இரண்டு மணி நேரத்திக்குள் பூர்த்தியாகி விட்டது. எனவே 11 மணியுடன் வாக்கு பதிவை நிறைவு செய்துவிட்டோம்.தங்களின் எண்ணங்களை பதிவு செய்த வாக்காளர்களுக்கு நன்றி.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக் குழு பரிசிலிக்கும். நன்றி. இவண் M.தமிமுன் அன்சாரி நாகை சட்டமன்ற உறுப்பினர் 13_02_17
மஜக தலைமையகதிற்கு மதுசூதனன், மா.பாண்டியராஜன் வருகை!
சென்னை.பிப்.13., நேற்று (12_02_17) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மாலை 6 மணிக்கு மதுசூதனன், அமைச்சர் மா.பாண்டியராஜன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனைவரையும் வரவேற்றார். உடன் பொருளாளர் ஹாரூன் ரஷீது, அவைத்தலைவர் மவ்லானா.நாசர் உமரி, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் திரு.O.பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவு கேட்டு வந்ததாக கூறினர்.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக்குழு எடுத்திருக்கும் முடிவு குறித்து அவர்களிடம் பொதுச்செயலாளர் விளக்கினார். இன்றைய அரசியல் நிலவரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி கூர்ந்து கவனித்து வருவதாகவும், இப்போதைக்கு எந்த முடிவும் இல்லையென்றும்,தங்கள் கோரிக்கையை தலைமை நிர்வாகக் குழு கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) 12_02_17
நாகப்பட்டினம் தொகுதியில் மக்கள் கருத்தாய்வு! தமிமுன் அன்சாரி MLA முடிவு!
சென்னை.,பிப்.12., தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நீடிக்கிறது வருத்தமளிக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளேன். நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறலாம். நாகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 13.02.17 திங்கள் கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இவண், M. தமிமுன் அன்சாரி MLA, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர். பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 12.02.17.
நியூஸ் 18 தொலைக் காட்சிக்கு மஜக பொதுச் செயலாளர் பேட்டி…
சென்னை.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இன்று மதியம் நியூஸ்18 சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது... * நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தங்கியுள்ளேன். * தமிழக அரசியலில் மத்திய அரசு குழப்பம் செய்கிறது. * அதிமுகவை பிளக்க பாஜக முயற்ச்சிக்கிறது. *அதிமுகவின் இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும். *அதிமுக பிளவுப்படக் கூடாது. * கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். என பேட்டியளித்தார்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி ( MJK IT-WING) சென்னை. 11.02.2017