You are here

மஜக தலைமையகதிற்கு மதுசூதனன், மா.பாண்டியராஜன் வருகை!

சென்னை.பிப்.13., நேற்று (12_02_17) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மாலை 6 மணிக்கு மதுசூதனன், அமைச்சர் மா.பாண்டியராஜன் ஆகியோர் வருகை தந்தனர்.

அப்போது பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனைவரையும் வரவேற்றார். உடன் பொருளாளர் ஹாரூன் ரஷீது, அவைத்தலைவர் மவ்லானா.நாசர் உமரி, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வர் திரு.O.பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவு கேட்டு வந்ததாக கூறினர்.இது குறித்து மஜக தலைமை நிர்வாகக்குழு எடுத்திருக்கும் முடிவு குறித்து அவர்களிடம் பொதுச்செயலாளர் விளக்கினார்.

இன்றைய அரசியல் நிலவரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி கூர்ந்து கவனித்து வருவதாகவும், இப்போதைக்கு எந்த முடிவும் இல்லையென்றும்,தங்கள் கோரிக்கையை தலைமை நிர்வாகக் குழு கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING)
12_02_17

Top