மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் வழியாக அறிந்து மிகுந்த வேதனையுற்றோம். அம்மா அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அனைத்து நல் உள்ளங்களும் அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 04_12_16
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு! நாகை தொகுதியில் MLA தலைமையில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்புகள்!
நேற்று (02.12.16 ) நாகப்பட்டினம் தொகுதியில் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து, கள ஆய்வுகளை நடத்தினார். நாகை நகர முக்கிய பகுதிகளில் சாக்கடை அடைப்புகள், மழை நீர் தேக்கங்களை கண்டறிந்து அதிகாரிகளை அழைத்து பேசினார். மீனவ மக்கள் வசிக்கும் புதிய நம்பியார் நகருக்கு அதிகாரிகளுடன் வந்து மக்கள் குறைக் கேட்டார். அங்குள்ள மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். பிறகு பொரவச்சேரி மற்றும் நாகூருக்கு வருகை தந்தார். மாலை திட்டச்சேரி மற்றும் திருமருகலுக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளை தொடர்புக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மழை மற்றும் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக சேலத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்…
கடந்த ( 1.12.16 )அன்று சேலத்தில் கொட்டும் மழையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா நடத்திய இந்நிகழ்ச்சியில் உலமாக்களுடன், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA,பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, INTJ தலைவர் S.M பாக்கர், தேசிய லீக் பொதுச்செயலாளர் M.G.K நிஜாமுதீன், ஜாக் துணை பொதுச்செயலாளர் முகைதீன் பக்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு சேலம்.
நாகூர் நிலக்கரி மாசு பரவல் பிரச்சனை! காரைக்கால் துறைமுக அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் MLA தலைமையில் நேரில் முறையீடு!
நாகூர் எல்லையில் அமைந்திருக்கும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் பின் பற்றப்படாததால் நிலக்கரி துகல்கள் காற்றில் கலந்து நாகூர், மேலவாஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படிகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நோய்கள் பரவுகிறது. கேடுகள் பெருகுகிறது. இதற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடந்து இன்று மார்க் துறைமுக பொது மேலாளர் ரெட்டி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு MLA அழைப்பு கொடுத்தார். அதுபோல் பல்வேறு தொண்டு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கும் அழைப்பு கொடுத்து அவர்களது குறைகளை கூற ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் சமூக ஆர்வலர்கள் மக்களின் துன்பங்களை விலாவாரியா ரெட்டி அவர்களிடம் விளக்கினர். இதற்க்கு பதிலளித்த ரெட்டி மேல் நிர்வாகத்திடம் இக்குறைகளைக் கூறி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும், மீண்டும் சந்திப்பதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து இப்பிரச்னையை கையாள 7 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 28.11.2016
நாகை அருகே பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!
நாகப்பட்டினம் பொரவச்சேரி அருகே ஆந்தங்குடியில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் +2 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 34 பேர் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்த மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறி, பிறகு அங்கு வந்த கலெக்டரிடம் உரிய இழப்பீடு தொகை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.