நேற்று (02.12.16 ) நாகப்பட்டினம் தொகுதியில் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து,
கள ஆய்வுகளை நடத்தினார்.
நாகை நகர முக்கிய பகுதிகளில் சாக்கடை அடைப்புகள், மழை நீர் தேக்கங்களை கண்டறிந்து அதிகாரிகளை அழைத்து பேசினார்.
மீனவ மக்கள் வசிக்கும் புதிய நம்பியார் நகருக்கு அதிகாரிகளுடன் வந்து மக்கள் குறைக் கேட்டார். அங்குள்ள மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
பிறகு பொரவச்சேரி மற்றும் நாகூருக்கு வருகை தந்தார். மாலை திட்டச்சேரி மற்றும் திருமருகலுக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளை தொடர்புக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மழை மற்றும் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசினார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.