நாகூர் நிலக்கரி மாசு பரவல் பிரச்சனை! காரைக்கால் துறைமுக அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் MLA தலைமையில் நேரில் முறையீடு!

image

நாகூர் எல்லையில் அமைந்திருக்கும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

அங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகள்
பின் பற்றப்படாததால் நிலக்கரி துகல்கள் காற்றில் கலந்து நாகூர்,
மேலவாஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படிகிறது.

இதனால் மக்கள்  பாதிக்கப்படுகின்றனர். நோய்கள் பரவுகிறது.
கேடுகள் பெருகுகிறது. இதற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர்
M.தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடந்து இன்று மார்க் துறைமுக
பொது மேலாளர் ரெட்டி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு MLA அழைப்பு கொடுத்தார். அதுபோல் பல்வேறு தொண்டு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கும் அழைப்பு கொடுத்து அவர்களது குறைகளை கூற ஏற்பாடு செய்தார்.

அதனடிப்படையில் சமூக ஆர்வலர்கள் மக்களின் துன்பங்களை விலாவாரியா ரெட்டி  அவர்களிடம் விளக்கினர். இதற்க்கு பதிலளித்த ரெட்டி
மேல் நிர்வாகத்திடம் இக்குறைகளைக் கூறி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும், மீண்டும் சந்திப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து இப்பிரச்னையை கையாள
7 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 28.11.2016