சென்னை,பிப்.11.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு 9 மணி வரை தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய அவைத்தலைவர் செங்கோட்டையன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு இரவு 10 மணியளவில் வருகை தந்து, தங்களது அரசியல் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். மனிதநேய ஜனநாய கட்சியின் ஆதரவு தங்களுக்கு தேவை என்றும் கோரினார். தற்போதைய மஜகவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை நகல் அவருக்கு வழங்கப்பட்டது அவரது வேண்டுகோள் குறித்து தலைமை நிர்வாகம் கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தலைமையகம்,சென்னை 11.02.17
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
சற்று முன் மஜக புதிய தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பொது செயலாளர்!
பிப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தில் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அழைத்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். உடன் பொருளாளர் S.S.ஹாருன் ரசிது, தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா நாசர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் துறைமுகம் பகுதி நிர்வாகிகள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 09.02.17
இன்பத் தமிழின் இனிய முகவரி மணவை முஸ்தபா!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அறிவியல் தமிழை வளர்த்தெடுத்து 8 லட்சம் புதிய தமிழ் சொற்களை தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கிய பேரறிஞர். மணவை முஸ்தபா தனது 82 வயதில் மரணமடைந்திருக்கிறார். (இன்னா லில்லாஹி ...) தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர். தமிழை இவர் காதலித்தாரா? தமிழ் இவரை காதலித்ததா? என்ற கேள்விகளுக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. தமிழ் செம்மொழி அந்தஸ்தை பெறுவதற்கு அரும்பாடுபட்டவர். இதற்காக தமிழக அரசுக்கு பல அரிய ஆலோசனைகளை திரட்டிக் கொடுத்தார். யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பில் 35 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியதோடு, ஆனந்த விகடனின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்புக்கு தலைமை பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அவர் எழுதிய "மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்" நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசும், "இஸ்லாமும், சமய நல்லிணக்கமும்" நூலுக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசும், "அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி" க்கு அனந்தாச்சாரி பௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதல் பரிசும் கிடைத்தது. ஆங்கிலம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்களை அவர் மொழிப் பெயர்த்துள்ளார். அதில் உலகின் தலைச்சிறந்த நூறு
எண்ணூர் எண்ணெய் கழிவுகளை பார்வையிட்ட மஜக பொதுச் செயலாளர்…
பிப்.06., சென்னை எண்ணூரில் கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் களிவுகளின் பாதிப்பை மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வளர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் மாநில செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர், மாவட்ட பொருளாளர் ஜாபர் உள்பட மௌலா, கரிமுல்லாஹ், தாரிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 05.02.17
நடுக்குப்பம் மீனவர்களை சந்தித்து மஜக தலைவர்கள் ஆறுதல்!
பிப்.05., சென்னையின் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., ஆறுதல் கூறினார். மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, அ.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மீனவர் அணிச்செயலாளர் பார்த்திபன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி, மாவட்ட துணைச் செயலாளர் பீர் முகம்மது, பகுதி செயலாளர் பஷீர் ஆகியோர் உடன் சென்றனர். நடுக்குப்பம் மீனவர் சமுதாய தலைவர்களும், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ் உள்ளிட்டோர்களும் வரவேற்று தங்களது பாதிப்புகளை கூறினர். காவல்துறையின் ஒரு பகுதியினர் கடும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், மீன்களையெல்லாம் பறித்து சென்றதாகவும், மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ததற்கு பழிவாங்கும் விதத்தில் அவர்கள் இப்படி நடந்ததாகவும் கூறினர். மேலும் தற்போது தமிழக அரசு நிவாரணப்பணிகளை நல்ல முறையில் செய்து தருவதாக கூறினர். மேலும் சில உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் எடுத்துக்கூறி செய்து தருவதாகவும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களிடம் கூறினார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) மத்திய சென்னை மாவட்டம் 05-02-2017