பிப்.05., சென்னையின் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., ஆறுதல் கூறினார்.
மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, அ.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மீனவர் அணிச்செயலாளர் பார்த்திபன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி, மாவட்ட துணைச் செயலாளர் பீர் முகம்மது, பகுதி செயலாளர் பஷீர் ஆகியோர் உடன் சென்றனர்.
நடுக்குப்பம் மீனவர் சமுதாய தலைவர்களும், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ் உள்ளிட்டோர்களும் வரவேற்று தங்களது பாதிப்புகளை கூறினர்.
காவல்துறையின் ஒரு பகுதியினர் கடும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், மீன்களையெல்லாம் பறித்து சென்றதாகவும், மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ததற்கு பழிவாங்கும் விதத்தில் அவர்கள் இப்படி நடந்ததாகவும் கூறினர்.
மேலும் தற்போது தமிழக அரசு நிவாரணப்பணிகளை நல்ல முறையில் செய்து தருவதாக கூறினர். மேலும் சில உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் எடுத்துக்கூறி செய்து தருவதாகவும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களிடம் கூறினார்.
தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK_IT_WING)
மத்திய சென்னை மாவட்டம்
05-02-2017