நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில்,நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் இன்று துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடலை நடத்தினார். தொகுதி மேம்பாடு குறித்தும்,தொகுதிக்கு ஆற்ற வேண்டிய திட்டமிடல்கள் குறித்தும் கருத்துக்களை பறிமாறினார். நேர்மையான முறையில் தான் மக்கள் பணி ஆற்ற வந்திருப்பதை குறிப்பிட்டு,அதற்கு அதிகாரிகள் நல் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முக்கிய அதிகாரிகளின் அலைப்பேசி எண்களை இணைத்து #வாட்ஸஅப் குழுமம் தொடங்கப்படும் என்றும்,அதன் வாயிலாக பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நாகப்பட்டினம் நகராட்சியின் சார்பில் 150 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என்றும்,அதை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை கேட்டுப் பெற விருப்பதாகவும் தெரிவித்தார். பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார். தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை
நாகப்பட்டிணம்
12ஆம் வகுப்பு வெற்றியாளர்களுக்கு மஜகவின் வாழ்த்துக்கள் .!
இவ்வாண்டு +2 தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் . போட்டிகளும் , நெருக்கடிகளும் நிறைந்த நவீன உலகில் , உங்களின் எதிர்காலத்திற்கும் , இயற்கை அறிவிற்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் கூரிய கவனம் செலுத்த வேண்டும் . வசந்த காலத்தின் வண்ணப் பறவைகளாய் சிறகு விரிக்க தயாராகுங்கள் . இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் , நம்பிக்கையை இழக்காமல் உத்வேகத்துடன் அடுத்த முயற்சியில் ஈடுபடுங்கள் . விழுவது வீழ்வதற்கல்ல .... எழுவதற்கே என்பதை எண்ணி மன உறுதியோடு புறப்படுங்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..! அன்புடன் M. தமிமுன் அன்சாரி பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-05-2016
கொட்டும் மழையில் மஜக பொதுச்செயலாளர் வாக்களித்தார் ..!
நாகப்பட்டினம் தொகுதியில் பிரம்மாண்ட பேரணி ..!
மே.14., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக-மஜக கூட்டணி சார்பில் பரப்புரை நிறைவடைவதையொட்டி இன்று (14-05-2016) மாலை 4 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற்றது . கோட்டை வாசலில் புறப்பட்ட பேரணி கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை கடந்து RDO அலுவலகம் நோக்கி புறப்பட்டது . திறந்த ஜீப்பில் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம் , அமைச்சர் ஜெயபால் , தொகுதி செயலாளர் ஆசைமணி , நகரச் செயலாளர் R.சந்திரமோகன் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் , குணசேகரன் , நகர்மன்ற தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் புறப்பட்டனர் . அவர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் , பொதுமக்களும் அணிவகுத்தனர் . கார் , ஜீப் , ஆட்டோக்களும் அணிவகுத்தன . ஊர்வலம் ஒரு முனையை கடக்க 10 நிமிடங்கள் ஆனது . வழியெங்கும் சாலையோரங்களிலும் , கட்டிடங்களிலும் பொதுமக்கள் நின்றுக் கொண்டு கைகளை அசைத்து வரவேற்பு கொடுத்தனர் . போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் தொண்டர் அணியினர் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியப்படியே வந்தனர் . எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தப்போது ,