மே.14., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக-மஜக கூட்டணி சார்பில் பரப்புரை நிறைவடைவதையொட்டி இன்று (14-05-2016) மாலை 4 மணிக்கு வாகனப் பேரணி நடைபெற்றது .
கோட்டை வாசலில் புறப்பட்ட பேரணி கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை கடந்து RDO அலுவலகம் நோக்கி புறப்பட்டது .
திறந்த ஜீப்பில் வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம் , அமைச்சர் ஜெயபால் , தொகுதி செயலாளர் ஆசைமணி , நகரச் செயலாளர் R.சந்திரமோகன் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் , குணசேகரன் , நகர்மன்ற தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் புறப்பட்டனர் .
அவர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் , பொதுமக்களும் அணிவகுத்தனர் . கார் , ஜீப் , ஆட்டோக்களும் அணிவகுத்தன .
ஊர்வலம் ஒரு முனையை கடக்க 10 நிமிடங்கள் ஆனது . வழியெங்கும் சாலையோரங்களிலும் , கட்டிடங்களிலும் பொதுமக்கள் நின்றுக் கொண்டு கைகளை அசைத்து வரவேற்பு கொடுத்தனர் .
போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் தொண்டர் அணியினர் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியப்படியே வந்தனர் . எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தப்போது , தாமதிக்காமல் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது .
நிறைவாக , RDO அலுவலகம் அருகில் 4.50 மணிக்கு பேரணி நிறைவுற்றது . இறுதியாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசிய வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி , இது வெற்றி விழாவுக்கான முன்னோட்ட பேரணி என்றும் , பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம் என்றும் , மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என்றும் கூறினார் .
அம்மா அவர்கள் மீண்டும் முதல் அமைச்சர் ஆனதும் அரசு மருத்துவக்கல்லூரியை நாகப்பட்டினத்திற்கு கொண்டு வருவேன் என்றும் , நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் , பனங்குடி ஏரியை தூர்வாரி தொகுதியின் குடிநீர் பஞ்சத்தை போக்குவேன் என்றும் , நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவேன் என்றும் 5 முக்கிய வாக்குறுதியை அளித்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார் …
தகவல் : மஜக ஊடகப்பிரிவு