இறைவனின் திருப்பெயரால்... *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* சார்பாக நடத்தும் *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* நிகழ்ச்சி குவைத்தில் இயங்ககூடிய அனைத்து தமிழ் இயக்க, அமைப்பு நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தங்களது கருத்தாய்வை வழங்க இருக்கிறார்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். நாள் : 12/08/2016 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6:00 மணிக்கு இடம் : பாரகான் உணவகம், அலி டவர், முர்காப் (KPTC பஸ்நிலையம் பின்புறம்) இவண், மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம், 55278478, 55260018, 60338005
Author: admin
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சேலம்(கி) சார்பில் இரத்த தான முகாம்…
திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தி மஜக கொடியேற்று நிகழ்ச்சி
ஆக.08., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் அருகில் எடையூர்-சங்கேந்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா இன்று மாலை 5 மணியவில் சங்கேந்தி பேருந்து நிறுத்த அருகில் நடைபெற்றது. இதில் எடையூர்-சங்கேந்தி மஜக செயலாளர் தமிம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் . இந்நிகழ்ச்சியில் எடையூர் சங்கேந்தி ஜமாத் தலைவர் என்.ஹாஜா அலாவுதீன் அவர்களும் , முத்துப்பேட்டை முன்னால் நகர செயலாளர் நியாஸ், இளைஞரணி செயலாளர் அசார்தீன், நாச்சிகுளம் நிர்வாகிகள் யாஸர், பாயிஸ், யாஸீன், நியாஸ், சதாம் மற்றும் தொண்டர்கள் பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டணர். வருகை தந்த அணைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இறுதியாக சமீர் அவர்கள் நன்றிகூறினார். தகவல் : மஜக ஊடகபிரிவு.
உற்சாகம் பெரும் நாகை கடற்கரை…
ஆக.08., நேற்று (07.08.16) மாலை நாகை கடற்கரையில் சிறுவர் பூங்கா வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரோட்டரி கிளப் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. இதுநாள் வரை கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் இருந்தது அதை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரோட்டரி கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதனுடைய முன்னோட்ட தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி, இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அப்போதுதான் திட்டங்களை விரைவாக தொடர முடியும் என கூறினார். மேலும், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதை அறிவிப்பு செய்த உடன் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்நிகழ்வில், பிரைம் ஆர்க்கிடெக் கல்லூரியின் தாளாளர் இராமதாஸ், EGSP கல்வி குழுமங்களின் செயலாளர் பரமேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சந்திரமோகன்,
பாயிண்ட் காலிமர் பன்னாட்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர்.
நாகை மாவட்டம் தோப்புத்துறை அருகில் உள்ள குரவப்புலத்தில் இயங்கி வரும் #Point_Calimere பன்னாட்டு CBSE பள்ளியில் நேற்று (06.08.2016) sports day நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இத்தாலி, ஈரான், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA, முன்னாள் அமைச்சர் R.ஜீவானந்தம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ,மாணவியரின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பள்ளியின் தாளாளரும், சமூக ஆர்வலருமான M.#சுல்தானுல்_ஆரிபின் அவர்கள் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட CBSE பள்ளிக்கூடங்களில் இதுதான் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; மஜக_ஊடகப்பிரிவு, நாகை தெற்கு.