மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பறது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 25.10.2016 அன்று இது குறித்து மத்திய அரசு டெல்லியில் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டு, பல கேள்விகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டை, சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறியபோது, தமிழகத்தின் நலன்களையும், சிறுபான்மை மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என தெரிவித்ததை, இன்று தமிழக அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..... நன்றி ! இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27_10_16
Author: admin
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு… மஜக சார்பில் தீபாவளி உதவி பொருட்கள்….
நாகையில் சமீபத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி அன்பளிப்பு பைகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வழங்கினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
மஜகவின் மாநில மீனவர் அணி செயலாளர் பார்த்தீபனுடன் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் நலம் விசாரிப்பு…
மஜக மீனவர் அணி செயலாளர் பார்த்திபன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். சகோதரர் பார்த்திபன் அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாருன்ரசீது அவர்கள் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மருத்துவமனை சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர். சகோதரர் பூரண உடல் நலம் பெற நாமும் பிராத்திப்போம். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு…
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழகத்தில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் வெற்றிப் பெற மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும். இத்தொகுதிகளில் மஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அதிமுக கூட்டணியின் வழிகாட்டுதலோடு இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.10.16
நெய்வேலியில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்ச்சாக வரவேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு இரவு 9 மணி அளவில் வருகை தந்தார்கள். அவர்களுடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜீதீன் அவர்கள், நாகை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் வருகை புரிந்தனர். கடலூர் மாவட்ட செயலாளர் N.இப்ராகிம், மாநில செயற்க்குழு உறுப்பினர் P.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் நெய்வேலி நகர நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களை அ.தி.மு.க நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான திரு.K.மனோகர் அவர்கள், திராவிட தொண்டு மைய தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான திரு.R.PS. பன்னீர் செல்வம் அவர்கள், அரிமா சங்க தலைவர் திரு.C.லட்சுமிநாராயணன் அவர்கள், அரிமா சங்க செயலாளரும் M.R.சரீப் அறக்கட்டளை தலைவரும்மான Ln. R.அன்வர்தீன்அவர்கள், அ.தி.மு.க மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் திரு.பாலு அவர்கள், அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. A.நாசர் அவர்கள், மந்தாரக்குப்பம் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலின் துணை செயலாளரும் அர்-ரகமத் பள்ளின் தாளாரும்மான ஹாஜி.நஸ்ருல்லா அவர்கள்,