வடசென்னை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஏழு இடத்தில மஜக கொடி ஏற்றப்பட்டது, மூன்று இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, கொடி ஏற்றுதல் மற்றும் பெயர் பலகை திறந்து வைத்தார்கள். அவைத் தலைவர் நாசர் உமரி, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜுத்தீன், மாநில மீனவர் அணிச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் அஜீம், மா. பொருளாளர் தாஹா, மா.து. செயலாளர் அன்வர் , பகுதி & கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏர்பாடு செய்திருந்தனர். மனிதநேய சொந்தங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.- தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) வட சென்னை மாவட்டம்.
Author: admin
மஜக திண்டுக்கல் நகர இளைஞரணி நிர்வாக கூட்டம்…
திண்டுக்கல்.பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் நகர இளைஞரனி நிர்வாக கூட்டம் நேற்று 23-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட இளைஞரனி செயலாளர் ஷாகித் கான் தலைமையில், மாவட்ட இளைஞரனி துணை தலைவர் அலி முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளரா மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன... மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்ணிட்டு திண்டுக்கல் நகரம் முழுவதும் 100க்கும் மேற்ப்பட்ட மரக்கன்று நடுவது என தீர்மானிக்கப் பட்டுள்ளன. நிகழ்ச்சி காலை சரியாக 11:00 மணிக்கு நடைபெறவுல்லதால் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப் படுகின்றது. தகவல் : அனஸ் முஸ்தபா, மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 24.02.17
நாகூர் தர்ஹா நிர்வாகிகளுடன் நாகை MLA கலந்துரையாடல்!
நாகை. பிப்.23., நாகூர் தர்ஹாவின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை முன்னிட்டு அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாகூர் தர்ஹா நிர்வாகம், வணிகர் சங்கம், வர்தகர் சங்கம், ஆகியவற்றின் கூட்டு கூட்டம் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. கந்தூரிக்கு வருகை தரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகள், வாகனகள் நிறுத்த வசதிகள், மின் விளக்கு வசதிகள், குடிநீர் வினியோகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவை அணைத்தும் வழக்கத்தை விட சிறப்பாக செய்யப்படும் என்று MLA அவர்கள் கூறினார்கள். மேலும் சென்னை மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தூர மார்க்கத்தில் இருந்து நாகை வரை வரும் பேருந்துகள் நாகூர் வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முயற்ச்சி செய்வதாக MLA அவர்கள் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 23.02.17.
காயல்பட்டினம் மஜக சார்பில் 2ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சிகள்…
மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகர கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் நாள் : 28-02-2017 நேரம்: காலை 9.00 மணி (இறைவன் நாடினால்) 1) மூண்று இடங்களில் கொடியேற்றுதல், 2) மரக்கன்றுகள் நடுதல், 3) உறுப்பினர் சேர்க்கை முகாம், 4) அரசு மருத்துவமணை உள் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல்... இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நகர செயலாளர் தலைமையில், நகர நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள் மனித நேய சொந்தங்கள் அனைவரும் வருக தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 23.02.2017
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி .
நாகை.பிப்.22., இன்று மாலை நாகப்பட்டினம் தொகுதியில் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டார் . கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு MLA அலுவலகம் வந்து அலுவல் பணிகளை தொடங்கினார். தொகுதி முழுக்க வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை MLA அவர்களிடம் வழங்கினர் . அதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 22-02-2017