நாகை. பிப்.23., நாகூர் தர்ஹாவின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை முன்னிட்டு அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நாகூர் தர்ஹா நிர்வாகம், வணிகர் சங்கம், வர்தகர் சங்கம், ஆகியவற்றின் கூட்டு கூட்டம் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.
கந்தூரிக்கு வருகை தரும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகள், வாகனகள் நிறுத்த வசதிகள், மின் விளக்கு வசதிகள், குடிநீர் வினியோகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவை அணைத்தும் வழக்கத்தை விட சிறப்பாக செய்யப்படும் என்று MLA அவர்கள் கூறினார்கள்.
மேலும் சென்னை மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தூர மார்க்கத்தில் இருந்து நாகை வரை வரும் பேருந்துகள் நாகூர் வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முயற்ச்சி செய்வதாக MLA அவர்கள் கூறினார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
23.02.17.