மார்ச்.15,
நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டச்சேரி பேரூர் நிர்வாகம் சார்பில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முன்னெடுக்க வேண்டிய களப்பணி சம்மந்தமாக ஆலோசிக்க பேரூர் செயலாளர் இப்ராஹிம் தலைமையில் தேர்தல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் கலந்துக்கொண்டு தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பேரூராட்சிக்குட்பட்ட 9 பாகங்களிலும் பாகமுகவர்கள் நியமனம் மற்றும்
வாக்காளர் சந்திப்பிற்கான பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான், MJVS மா.து.செயலாளர் நிசார், பேரூர் பொருளாளர் சதாம் பேரூர் நிர்வாகிகள் பாஸித், சாகுல், தாரிக், கலீல், சமீர், சலாஹுதீன், ரசீது, சபியுதீன் உள்பட திரளானோர் கலந்துக் கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
14.03.2021