சேவைக்கான களம் விரிகிறது.. #மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்! கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது. தொடர்புக்கு மஜக லால்பேட்டை நகரம் 9488892960 மஜக ஆயங்குடி நகர கிளை 9444978528 குறிப்பு- கோவை, இளையான்குடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மஜக அவசர ஊர்திகள் பொதுமக்கள் சேவையாற்றி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம்
Author: admin
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை! மஜக கடும் கண்டனம்..
சென்னை.மார்ச்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மீனவ அணி செயலாளர் பார்த்தீபன் வெளியிடும் கண்டன அறிக்கை. இந்திய கடல் பகுதியில் ராமேஸ்வரத்தைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 21 வயதான மீனவர் ப்ரிட்சோ கொல்லப்பட்டுள்ளார். மத்திய பாஜக ஆட்சியின் மெத்தனப்போக்கால் தமிழகத்தில் மீனவர்களின் உயிர் பலி தொடர்கிறது. இந்த துப்பாக்கி சூட்டை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைக்கிறது. இவண் பார்த்தீபன் மாநில செயலாளர் மீனவ அணி மனிதநேய ஜனநாயக கட்சி 06-03-2017 #MJK_IT_WING
MLAவுடன் உலமாக்கள் சந்திப்பு!
சிங்கப்பூரில் ஒரு பொன்மாலைப் பொழுது…!
சிங்கப்பூரில் இன்று (06.03.2017) கவிமாலை சார்பில் ‘ நானும் - தமிழும் ’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்ச்சி ஆனந்தபவனில் நடைபெற்றது . தமிழகத்திலிருந்து வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழச்சி.தங்கபாண்டியன் , பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உரையாற்றினர் . நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்மொழி வளர்ச்சி , இலக்கியம் , கவிதை ஆகியன குறித்து கேள்வி – பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது . நேயர்களின் கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர் . உற்சாகம் , நகைச்சுவை , கிண்டல் , கைத்தட்டல் என நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தோழர் . இறைமதி ஒருங்கிணைத்தார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். விடுமுறை நாள் அல்லாத திங்கள்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது . தகவல் தொழில்நுட்ப அணி (MJK-IT WING) சிங்கப்பூர் மண்டலம்
சிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA.,
புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் "சிறகிருந்தால் போதும்..." நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார். சிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் அரிகிருஷ்ணன், பெண்கூலின் பள்ளிவாசல் நிர்வாகக்குழு துணை தலைவர் அல்ஹாஜ் M.Y.முகம்மது ரபீக், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் மாறன் நாகரத்தினம், கவிஞர் பிச்சனிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு (FIM) தலைவர் நாகூர் கெளஸ் அவர்கள் நிணைவு பரிசை வழங்க, தோப்புத்துறை (TMAS) சங்க தலைவர் தீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். "மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றிய பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகப்பட்டினத்திற்கும், தென்கிழக்காசியாவிற்கும் இடையில் இருக்கும் வரலாற்று தொடர்புகளையும், நாகப்பட்டினம் தொகுதி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் செய்த தமிழ்