ஏப்ரல் 04, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சாரை சாரையாக மஜக-வில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கோவை, நாகை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சேலத்திலும் இணைப்பு நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. மஜக மாநில துணைச் செயலாளர் A.J.S.தாஜுதீன் அவர்கள் முன்னிலையில், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் I.குலாப் ஜான் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு.சுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இவர்களுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இதில் சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட பொருளாளர் A.K.சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சேலம்_மாவட்டம் 04-04-2024.
Author: admin
அந்தியூரில்… தேர்தல் பணிமனை திறப்பு… மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்பு…
ஏப்ரல்.04., திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது திருப்பூர் நாடாளுமன்ற CPI வேட்பாளர் திரு K.சுப்பராயன் அவர்களை வெற்றி பெற மஜக அயராது உழைக்கும் என்றார். இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் A.K.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட IT WING செயலாளர் சபி மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் என திரளான மஜக சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம். 03.04.2024.
கிருஷ்ணகிரியில்… இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று தெலுங்கிலும் உருதுவிலும் உரையாற்றினார்…
ஏப்ரல்.04., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் தெலுங்கிலும், உருதுவிலும் உரையாற்றி வாக்குகளை சேகரித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை M.A., B.L., MLA., திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA,, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA, INTUC குப்புசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், இளைஞர் அணி செயலாளர் மஹபூப் ஷெரிப்,மாநகர துணைச் செயலாளர் மஹபூப் உட்பட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #கிருஷ்ணகிரி_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 03.04.2024.
திருவாரூரில்… புலிவலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாகன அணிவகுப்பு…
ஏப்ரல் 03., திருவாரூர் மாவட்டத்தில் நாகை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து மஜக தொகுதி தேர்தல் பொறுப்பு குழு தலைவர் பொதக்குடி ஜெய்னுதீன் மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் மஜகவினர் வாகன அணிவகுப்புடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதின், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொதக்குடி முகமது தாஹிர் , மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சித்திக், அத்திக்கடை ரிஸ்வான் ,திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால்,அப்துல் கரீம், கமால்தின், ரியாஸ்,ஹசன் அலி, அபு , பகுருதீன், வசந்த் மற்றும் பல மஜக நிர்வாகிகள் திறலாக கலந்து கொண்டனர். தகவல்: #மனிதநேய_ஜனநாயக_கட்சி, #MJK_IT_WING #தேர்தல்_பணி_குழு #நாகை_பாராளுமன்ற_தொகுதி 02-04-2024