மனிதநேய ஜனநாயக கட்சியின், தர்மபுரி மாவட்ட செயலாளராக, A.அப்ரார் பாஷா த/பெ; அப்சர் பாஷா 26/37, மஜீத் வீதி, பொம்மிடி, தர்மபுரி அலைபேசி;9894461786 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 22.01.2024
Author: admin
Learning generalizable AI models for multi-center histopathology image classification npj Precision Oncology
Revolutionizing agriculture with artificial intelligence: plant disease detection methods, applications, and their limitations In the context of plant disease identification problems, it has been discovered that texture feature usage yields more favorable outcomes (Kaur et al, 2019). By using the grey-level co-occurrence matrix (GLCM) method, one may determine the area’s energy, entropy, contrast, homogeneity, moment of inertia, and other textural features (Mokhtar et al., 2015; Islam et al., 2017). Texture characteristics may be separated using FT and wavelet packet decomposition (Kaur et al, 2019). Additional features such as the Speed-up robust feature, the Histogram of Oriented Gradients, and the Pyramid Histogram of Visual Words (PHOW) have shown greater effectiveness (Kaur et al, 2019). In agriculture, the procedure of extracting features from raw data is known as
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மஜகவில் இணைந்தனர்..
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலை நோக்கி தமிழகம் முழுவதும் பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமீன் மற்றும் சுதீஷ் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். மனிதநேய ஜனநாயக வழக்கறிஞர் பாசறையில் இணைந்து சட்ட பணிகளை மக்கள் நலனுக்காக சிறப்புடன் பணியாற்ற மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்தினார். மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர், மாநில செயலாளர்கள் கோவை. ஜாஃபர், பல்லாவரம் ஷஃபி, நெய்வேவலி இப்ராஹீம் ஆகியோர் வரவேற்று வாழ்தினர் மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், சலாம், பார்த்தீபன், தாஜுதீன், எஸ்.எம்.நாசர் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_தலைமையகம் 15.01.24
சென்னையில் மஜக இல்ல மண விழா
மஜக மாநிலச் செயலாளர் ஷஃபி இல்ல நிகழ்வில்.... மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் SDPI டெஹ்லான் பாகவி வாழ்த்து... பொதுச் செயலாளர் நாசர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு..... ஜனவரி 14 மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களது மகள் ஆசிகா என்பவருக்கும் மணமகன் அஸாருதீன் என்பவருக்கும் திருமணம் சென்னை மாதாவரத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்கள் இத்திருமண நிகழ்வில் முன்னிலை வகித்தார். திருமண நிகழ்வினை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் கட்சி கொடிகள், பதாகை என பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கினர். இத்திருமண நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் தாஜுதீன், மாநில செயலாளர்கள் கோவை ஜாபர், நெய்வேலி இப்ராஹீம், மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், பார்த்திபன், பேராவூரணி சலாம், ஏ.ஜெ.எஸ்.தாஜுதீன், எஸ்.எம் நாசர், மற்றும் பல்வேறு பொறுப்புகளில் உள்ள மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_தலைமையகம் 14.01.24
தமிழர்களின் பெருமிதம் பொங்கல்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பொங்கல் வாழ்த்து!
உலக தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இன்பம் பொங்க கொண்டாடப்படுகிறது.. நமது நாட்டில் பண்டிகைகள் என்பது ஒரு சமூக இளைப்பாறலாக கருதப்படுகிறது. உழைத்துக்கொண்டும், ஒடிக்கொண்டுமிருக்கும் சமூகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையோடு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்றாக திகழ்கிறது. விவசாயிகளின் அறுவடை திருநாளாக முன்னிறுத்தப்படும் பொங்கல் பண்டிகை நவீன சமூகத்தில் புதுப்புது அர்த்தங்களை வெளிப்படுத்தி ஒரு கலாச்சார திருநாளாகவும் உருவெடுத்து வருகிறது. இயற்கை விவசாயத்தின் வளர்ச்சி, நீராதார பாதுகாப்பு, சூழலியல் சமன்பாடு, கால்நடைகளின் உரிமைகள் ஆகியன குறித்த கருத்தாக்கங்களை இத்திருநாளில் முன்னெடுக்க உறுதியேற்போம். பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 14.01.2024