உங்கள் அறிவாற்றலை நாட்டு நலனுக்கு பயன்படுத்துங்கள்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..! பிப்ரவரி.01., தமிழ்நாடு முழுக்க கடந்த 27 ஆண்டு காலமாக 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி குழுமம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை நடத்தி வருகிறது. முதல் முறையாக ஒரே நேரத்தில் 160 பெண் அறிஞர்களுக்கான (ஆலிமாக்கள்) பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாணவிகளை வாழ்த்தி பேசினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறித்த பார்வை தெளிவானது. கண்ணியமான எல்லைக்குள் இருந்து அவர்களின் ஆற்றலை, அறிவை, திறனை வெளிப்படுத்த இந்த சமூகம் எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. அவர்கள் தொழில் செய்ய, வேலைக்கு செல்ல தடை யேதும் இல்லை. இந்தியாவில் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி - பாத்திமா பீவியை இந்த சமூகம் தான் தந்தது. இந்தியாவிலேயே முதல் பெண் ஆசிரியை மராட்டியத்தை சேர்ந்த பாத்திமா என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடெங்கிலும் வலுத்த போது, டெல்லியில் காவல் துறை அத்துமீறியது. அப்போது இயந்திர துப்பாக்கிகளுடன் காவலர்கள் சூழ்ந்த போது, தன்னந்தனியாக நின்று
Author: admin
ஞானவாபி பள்ளியில் பூஜைக்கு அனுமதியா ?… நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு..
சென்னையில் தடையை மீறி மஜக போராட்டம்.. பிப்ரவரி.01., காசியில் உள்ள புராதான ஞானவாபி பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் தொடர் முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாரணாசி நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், அப்பள்ளியின் தென்புறத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இது 1992 வழிபாட்டுதல பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டன தெரிவித்தார். இத்தீர்ப்பை கண்டித்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய சென்னை மாவட்ட மஜக சார்பில். நேற்று இரவு 11 மணியளவில் அறிவிப்பு செய்யப்பட்டது. குறுகிய கால அறிவிப்பில் காலை 11.30 மணியளவில் மத்திய சென்னை மாவட்ட மஜக-வினர் திருவல்லிகேணி - வாலஜா பள்ளி அருகில் கூடினர். அங்கிருந்து சேப்பாக்கம் ஸ்டேடியம் நோக்கி புறப்பட்டப் போது, காவல் துறையினர் தடுத்தனர். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த, ஜனநாயக ரீதியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று ஸ்டேடியத்தை முற்றுகையிட போவதை ஆரம்ப நிலையிலேயே எப்படி தடுக்கலாம்? என மஜக-வினர் அதிகாரிகளிடம் வாதிட்டனர். காவல் துறை அவர்களை மறித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு
உடைய நாட்டில் …. மஜகவில் தொடரும் இணைப்பு நிகழ்வுகள்…
தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் திரளானோர் இணைந்தனர்! பிப்.01. கடந்த 6 மாதங்களில் தமிழகம் எங்கும் திரளானோர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தஞ்சை மாவட்டத்திலும் அத்தகைய நிகழ்வுகள் தொடர்கின்றது. இன்று தஞ்சை (தெற்கு )மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையநாடு பகுதியை சேர்ந்த சர்புதீன் தலைமையில் - சபீகான் உள்ளிட்ட இளைஞர்கள் பெரியவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டார். மேலும் பிப்ரவரி 10 - திருச்சி முற்றுகை போராட்ட களத்திற்கு பேராவூரணி தொகுதியிலிருந்து மட்டும் 20 வேன்களில் புறப்பட ஆயத்தமாகி உள்ளனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், மாவட்ட செயலாளர் அதிரை.ஷேக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாவட்ட துணை செயலாளர் பைசல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வாஹித், ஒன்றிய செயலாளர் நூருல்
காசி ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில்,
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவராக, அ. செமீர் த/பெ; அபு 12/891 T B ரோடு, V.T.C கூடலூர், நீலகிரி அலைபேசி: 7094048583 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.01.2024.