பிப்ரவரி.07, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் முன்னிலையில் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர் தின் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தும் எடுத்துரைத்தார். அவருடன் மாநில துணைச் செயலாளர் பேரா. சலாம் உடன் இருந்தார். இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான்,மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத்,மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் அஹமதுல்லாஹ்,பேபி ஷாப் (எ) பகுருதீன்,பாலமுரளி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் H ஷாகுல் ஹமீது, துணை செயலாளர் மாலிக்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துறையூர் பிரவீன்,MJTS மாவட்ட துணை செயலாளர் ஆதினங்குடி சாகுல்,ஒன்றிய துணை செயலாளர் பாவா, நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம்,ஏனங்குடி கிளை நிர்வாகிகள் அக்ரம், அர்சத்,உமர் முக்தார், நஸிம், பதுருதீன், இம்தியாஸ்,நாகூர் நகர நிர்வாகிகள் நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, தகவல்
Author: admin
முதல் கட்டமாக 12 பேர் விடுதலை! இது மக்களுக்கு கிடைத்த வெற்றி! பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் முடிவு
பிப்ரவரி.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி வழியே இரவு 10 மணிக்கு நடைபெற்றது. இதில் பிப்ரவரி 10 அன்று நடைபெறவிருந்த திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று மாலை குறிப்பிட்ட 36 சிறைவாசிகளில் 5 பேரை ஆளுனர் கையொப்பமிட்டு விடுதலை செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 7 பேர் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் விடுதலை ஆன நிகழ்வு குறித்து சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த சிறைவாசிகளில் ஐந்து பேரை முதல் கட்டமாக ஆளுனர் விடுதலை செய்திருப்பதை ஒரு நல்ல முன்னேற்றம் என்றே இக்கூட்டத்தில் வரவேற்கப்பட்டது. அடுத்தடுத்த பலரும் வெளி வரும் வாய்ப்புகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரி 10 அன்று மஜக சார்பில் அறிவிக்கப்பட்ட திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு எங்கும் மஜக நிர்வாகிகள் இரவு பகலாக இதற்காக உழைத்து வந்த நிலையில்; பல்லாயிரக்கணக்கான மக்களை தயார் படுத்திய சூழலில்;
IMMK நிர்வாகி மணவிழா… மஜக மாநில பொருளாளர் ஜே.எஸ். ரிஃபாயீ பங்கேற்பு
பிப்ரவரி.05., IMMK மாநில செயலாளர் ஜபருல்லாஹ் அவர்களின் மண விழா மதுக்கூரில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அதிரை ஷேக், மாவட்டத் துணைச் செயலாளர்கள் பைசல், அஹமத் ரிபாய்தீன், சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞரணி செயலாளர் Esm.சாகுல் ஹமீது, மதுக்கூர் நகர தலைவர் M.அன்வர் கனி, நகரத் துணைச் செயலாளர் முகமது நிஷார், மாணவர் இந்தியா நகரத் தலைவர் அசாருதீன் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 05.02.2024.
பிப் 10 திருச்சி மத்திய சிறை முற்றுகை..! இறுதிகட்ட பணிகள் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் OR. ஜாக்கிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைபெற்றது. இதில் பிப் 10 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள், மக்களை திரட்டுதல் போன்றவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் SA. தையுப் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 04.02.2024.
நாம் தமிழர் வீடுகளில் சோதனை… NIA வின் இலக்குத்தான் என்ன? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்
நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளில் NIA சோதனை நடத்தியிருக்கிறது. அவர்கள் ஜனநாயக ரீதியாக அரசியலில் களமாடுகிறார்கள் அவர்களது அரசியலின் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களை தவறானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. தேசிய புலனாய்வு முகமை (NIA) தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறது. அவர்களது இலக்குத்தான் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுப்பட்டு வருகிறது என்பதை ஒன்றிய அரசு புரிந்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகவாதிகளை ஜனநாயக ரீதியாக களத்தில் எதிர்கொள்வதே அரசியல் ஆளுமையாகும். இவண் மு.தமிமுன் அன்சாரி தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 04.02.2024.