பிப்ரவரி.07,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் முன்னிலையில் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர் தின் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தும் எடுத்துரைத்தார். அவருடன் மாநில துணைச் செயலாளர் பேரா. சலாம் உடன் இருந்தார்.
இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான்,மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத்,மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் அஹமதுல்லாஹ்,பேபி ஷாப் (எ) பகுருதீன்,பாலமுரளி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் H ஷாகுல் ஹமீது, துணை செயலாளர் மாலிக்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துறையூர் பிரவீன்,MJTS மாவட்ட துணை செயலாளர் ஆதினங்குடி சாகுல்,ஒன்றிய துணை செயலாளர் பாவா, நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம்,ஏனங்குடி கிளை நிர்வாகிகள் அக்ரம், அர்சத்,உமர் முக்தார், நஸிம், பதுருதீன், இம்தியாஸ்,நாகூர் நகர நிர்வாகிகள் நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இஸ்மாயில், தோப்புத்துறை நிர்வாகிகள் அவுலியா முகமது, அப்துல் மாலிக், சதாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
06.02.2024.