பிப்ரவரி.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் ஓசூரில் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான ஒசூர் நவ்சாத் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிர்வாக சீரமைப்புகள், புதிய கிளைகள் அமைப்பு, உறுப்பினர் சேர்ப்பு, கட்சியில் சேரும் புதியவர்களுக்கான வாய்ப்பு ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய தலைவர் அவர்கள், அசாத்தியங்களை சாத்தியப் படுத்துவதே மஜக-வின் சாதனைகளாக உள்ளது என்றார். முன்பை விட இப்போது மஜக பணிகளால் ஈர்க்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மஜக மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்பதையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன், பெங்களூர் மண்டல நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முகமது உமர், மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்டத் துணைச் செயலாளர் முன்னா, வேலூர் மாவட்ட செயலாளர் கஸ்பாஸ் ஏஜாஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடமேற்கு_மண்டலம் 10.02.2024.
Author: admin
ஒசூர்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை! மஜக வினர் உற்சாக வரவேற்பு
பிப்ரவரி.10., இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் முகம்மது உமர் தலைமையில் நகர மஜக-வினர் உற்சாக வரவேற்பளித்தனர். பிறகு மஜக கொடிகளுடன் வாகன அணிவகுப்பும் நடத்தப்பட்டது. பத்தலபள்ளி கிளையில் மஜக கொடியையும் எழுச்சி முழக்கங்களுடன் ஏற்றி வைத்தார். இதில் மேலிட பொறுப்பாளரும், மஜக மாநில துணைச் செயலாளருமான ஓசூர் நவ்ஷாத், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்தார், கலீல் பாஷா, அய்யூப், ஜலால் மற்றும் ஆரிப் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர மஜக நிர்வாகிகள் சிறப்பான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கிருஷ்ணகிரி_மாவட்டம் 10.02.2024.
ஒசூர் பத்திரிக்கையாளர் சந்திப்பு… ராபாட் பயாஸ் உள்ளிட்டோரை அவரவர் விரும்பும் நாட்டுக்கு ஏன் அனுப்ப கூடாது? நாடாளுமன்ற தேர்தலில் மஜக நிலைபாடு என்ன? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி
பிப்ரவரி.11., இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மஜக-வினர் சிறப்பான வாகன அணிவகுப்பு மரியாதையை அளித்தனர். கொடியேற்றல், மாவட்ட அலுவலகம் திறப்பு, மண்டல ஆலோசனை கூட்டம் ஆகியவற்றுக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது... பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் எங்களது பங்களிப்புகள் அளப்பறியது. தற்போது விடுதலை ஆகியுள்ளவர்களில் ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் திருச்சி அகதிகள் முகாமில் உள்ளனர். உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகு, அகதி முகாமில் ஏன் இருக்க வேண்டும்? சமீபத்தில் ராபர்ட் பயாஸ் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவர்களது கோரிக்கையை ஏற்று அவரவர் விரும்பும் நாட்டுக்கு அவர்களை அனுப்பிட வேண்டும். ஜெயக்குமார் குடும்பம் சென்னையில் உள்ளது. அவரை அவரது குடும்பத்துடன் வாழ அனுப்பிட வேண்டும். இதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் உதவ வேண்டும். இவ்வாறு கூறினர். பிறகு, உத்தரகாண்ட் மாநிலத்தில் மசூதி இடிப்பை கண்டித்து நடந்த போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் 8 பேரை கொன்ற ஆளும் பாஜக அரசின் படுகொலைகளை கண்டித்தார். பிறகு செய்தியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மஜக-வின் நிலைபாடு குறித்து கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையம்
சென்னையில் CAA நகல் எரிப்பு… மஜக போராட்டத்தில் மக்கள் ஆவேசம்
பிப்ரவரி.10., காசியில் உள்ள புராதான ஞானவாபி பள்ளி வாசலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சங்பரிவார அமைப்புகள் தொடர் முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாரணாசி நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பில், அப்பள்ளியின் தென்புறத்தில் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இத்தீர்ப்பை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடத்துமாறு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக-வினரை கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று மஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக திருவெற்றியூர் தாங்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் L.முகம்மது ஜாஃபர் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபீ கண்டன முழக்கமிட்டு துவக்கி வைத்தார். மாநில துணை செயலாளர்கள் அஸாருதீன், பேரா. S.M.A. சலாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M. நாசர் அவர்களின் ஒருங்கிணைப்பில் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கடந்த வாரம் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய சென்னை மாவட்டம் சார்பாக ஒரு முற்றுகை போராட்டம் தடையை மீறி நடைபெற்றது. தற்போது 48 மணி நேர அறிவிப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த
சிறைவாசிகள் விடுதலை நிகழ்வு! அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்! திருச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
பிப்ரவரி.09., மனிதநேய ஜனநாயக கட்சியின், திருச்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். அவருடன் மஜக மாநிலச் செயலாளரும், மேலிட பொருளாளருமான அகமது கபீர், மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை துரை முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிப் 10 சிறை முற்றுகை போராட்ட பணிகளுக்கு சிறப்பாக ஆயத்தப் பணிகளை மிக சிறப்பாக முன்னெடுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். இந்த போராட்டம் நாளை திட்டமிட்டப்படி நடந்திருந்தால், தமிழகம் தழுவிய பிரம்மாண்ட ஆர்ப்பாட்ட களமாக அது மாறியிருதிருக்கும் என்றும், சிறைவாசிகளின் விடுதலைக்காக நடைபெற்ற ஆகப் பெரிய எழுச்சியாகவும் அது அமைந்திருக்கும் என்றும் தலைவர் குறிப்பிட்டார். மஜக-வின் திட்டமிட்ட போராட்ட நகர்வுகள்தான் சிறைவாசிகளின் விடுதலை முயற்சிகளில் புதுப்புது தீர்வுகளை பெற்றுக் கொடுத்தது என்பதை மக்கள் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக இதை சட்டசபையில் விவாதமாக்கி , அதை மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றிய மஜக-வின் ராஜதந்திர நடவடிக்கை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று பதிவு என்றார். இந்த விடுதலை களத்தில் போராடிய அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும், தலைவர்களுக்கும், மனித உரிமை