பிப்ரவரி.25., குவைத் நாட்டின் தேசிய தினம் இன்று (பிப்ரவரி 25) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தற்போது குவைத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், குவைத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குவைத் தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவை இன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு வருகை தந்த அவரை அதன் தலைவர் ஜலீல் அவர்கள் வரவேற்றார். அதில் பேசிய தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதாவது: உழைப்பதற்காக இங்கு வரும் இந்தியர்களுக்கு - தமிழர்களுக்கு இந்த நாடு வாழ்வாதரங்களை வழங்குகிறது. நமது வாழ்வு உயர இந்த நாடு வாய்ப்புகளை தருகிறது. இங்கு உழைக்க வந்திருக்கும் நாம், அம்மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கிறோம். இந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நமது இரு நாடுகளுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவுகிறது நாம் இப்போது இங்கு கொடுக்கும் இரத்தம் இந்து- முஸ்லிம் - கிரிஸ்தவர் என்பதை தாண்டி அரபியர், ஆசியர், ஆப்பிரிக்கர், ஐரோப்பியர் என பலருக்கும் கிடைக்கவிருக்கிறது. இரத்ததானம் என்பது சாதி, மதம், இனம், மொழி, நாடு என எல்லைகளை கடந்து உயிர் கொடுக்கிறது. எனவே இன்று குவைத் தேசிய தினத்தில் இரத்ததானம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்
Author: admin
குவைத்தில்… தோழர் சங்கரய்யாவை சிறப்படுத்திய தமிழர்கள்! MKP மாநாட்டில் தமிழர்களை ஈர்த்த நுழைவாயில்…
பிப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு கடந்த பிப்ரவரி 23, வெள்ளி அன்று குவைத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி Ex MLA, பேராசிரியர் சுந்தரவள்ளி, ஜீவா டுடே நெறியாளர் தோழர். ஜீவ சகாப்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டின் அரங்க நுழைவாயிலுக்கு மறைந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர், சங்கரய்யா அவர்களின் பெயரை சூட்டியிருந்தனர். குவைத் வாழ் தமிழர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றதோடு, மாநாட்டு அமைப்பாளர்களை இதற்காக பலரும் பாராட்டினர் தகவல்; #mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #குவைத்_மண்டலம் 23.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, S.ஜமால்தீன் த/பெ; I.சம்சுதீன் 41கலைவாணர் தெரு, அரியமங்கலம், திருச்சி.10 அலைபேசி; 7092957211 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநிலத் துணைச் செயலாளராக, U. முஹம்மது இஹ்ஸானுல்லாஹ் 72, காந்திஜி வீதி, அண்ணா நகர், பி. பெ அக்ரஹாரம், ஈரோடு - 5 அலைபேசி; 88389 28192 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.02.2024.
மஜக 9 ஆம் ஆண்டு தொடக்கம்… தொடங்கியது விருந்தோம்பல் மற்றும் நலத்திட்ட உதவிகள்
பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று துவங்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகமெங்கும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும், விருந்தோம்பல் நிகழ்ச்சிகளும் நடைபெற துவங்கி உள்ளது. அதன் ஒரு நிகழ்வாக இன்று வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பாக மாணவர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் M.அமீர் உசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர் SM.நாசர், இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாவட்டச் செயலாளர் L ஜாஃபர் சாதிக், மாவட்ட பொருளாளர் N.நிஜாம் பாய் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் MJTS மாவட்ட செயலாளர் S.வெங்கடேசன், MJTS மாவட்ட பொருளாளர் M.ஜீலானி அகமத், MJTS துணைச்செயலாளர் N.இளங்கோ, மாவட்ட இளைஞர் அணியின் துணை செயலாளர் J.முகமது பைசல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் J.ரியாஸ் கான், மருத்துவ அணி பொருளாளர் N.அசார் உசேன் மற்றும் P.ஜீவா, R.நகுல் M.நகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_கிழக்கு_மாவட்டம் 24.02.2024.