You are here

மஜக 9 ஆம் ஆண்டு தொடக்கம்… தொடங்கியது விருந்தோம்பல் மற்றும் நலத்திட்ட உதவிகள்

பிப்.24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று துவங்க இருக்கிறது.

இதை முன்னிட்டு தமிழகமெங்கும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும், விருந்தோம்பல் நிகழ்ச்சிகளும் நடைபெற துவங்கி உள்ளது.

அதன் ஒரு நிகழ்வாக இன்று வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பாக மாணவர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி இளைஞர் அணி மாவட்ட செயலாளர் M.அமீர் உசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர் SM.நாசர், இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் மாவட்டச் செயலாளர் L ஜாஃபர் சாதிக், மாவட்ட பொருளாளர் N.நிஜாம் பாய் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் MJTS மாவட்ட செயலாளர் S.வெங்கடேசன், MJTS மாவட்ட பொருளாளர் M.ஜீலானி அகமத், MJTS துணைச்செயலாளர் N.இளங்கோ, மாவட்ட இளைஞர் அணியின் துணை செயலாளர் J.முகமது பைசல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் J.ரியாஸ் கான், மருத்துவ அணி பொருளாளர் N.அசார் உசேன் மற்றும் P.ஜீவா, R.நகுல் M.நகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
24.02.2024.

Top