குவைத்தில் இரத்ததான முகாம்! நமது இரத்தம் நாடு மதம் இனங்களை கடந்து உயிர்களை வாழ வைக்கிறது.! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேச்சு….

பிப்ரவரி.25.,

குவைத் நாட்டின் தேசிய தினம் இன்று (பிப்ரவரி 25) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தற்போது குவைத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், குவைத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குவைத் தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவை இன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அங்கு வருகை தந்த அவரை அதன் தலைவர் ஜலீல் அவர்கள் வரவேற்றார்.

அதில் பேசிய தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசியதாவது:

உழைப்பதற்காக இங்கு வரும் இந்தியர்களுக்கு – தமிழர்களுக்கு இந்த நாடு வாழ்வாதரங்களை வழங்குகிறது.

நமது வாழ்வு உயர இந்த நாடு வாய்ப்புகளை தருகிறது.

இங்கு உழைக்க வந்திருக்கும் நாம், அம்மக்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கிறோம்.

இந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது இரு நாடுகளுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவுகிறது

நாம் இப்போது இங்கு கொடுக்கும் இரத்தம் இந்து- முஸ்லிம் – கிரிஸ்தவர் என்பதை தாண்டி அரபியர், ஆசியர், ஆப்பிரிக்கர், ஐரோப்பியர் என பலருக்கும் கிடைக்கவிருக்கிறது.

இரத்ததானம் என்பது சாதி, மதம், இனம், மொழி, நாடு என எல்லைகளை கடந்து உயிர் கொடுக்கிறது.

எனவே இன்று குவைத் தேசிய தினத்தில் இரத்ததானம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

குவைத்தில் மூத்த அமைப்பான 28 வருடங்களாக செயல்பட்டு வரும் TMCC, கடந்த 19 ஆண்டுகளாக இச்சேவையை தொடர்வதற்காக அவர்களையும் பாராட்டுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இரத்ததான முகாமில் பங்கேற்று இரத்ததானம் செய்தவர்களையும் சந்தித்து நலம் விசாரித்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் TMCC அமைப்பின் நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து அவர்களது சேவைகளுக்கும் வாழ்த்து கூறினார்.

இந்நிகழ்வில் குவைத் மண்டல MKP செயலாளர் நீடூர் நபீஸ், பொருளாளர் சதக்கத்துல்ல, துணைச் செயலாளர்கள் சுவாமிமலை ஜாஹிர், ஆயங்குடி நாசர், மண்டல அணி நிர்வாகிகள் வேலம்புதுக்குடி சர்புதீன், நா.கோயில் சுல்தான், பேர்ணாம்பேட் துபைல், விளங்குடி தாஹிர், தஸ்தகீர் உள்ளிட்ட MKP-யினர் பங்கேற்றனர்.

தந்தை பெரியார் நூலக காப்பாளர் தோழர் சித்தார்த்தன் அவர்கள் குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு வழங்கிய ‘கேக்’ கை அனைவருக்கும் தலைவர் அவர்கள் வழங்கினார்.

தகவல்:
#mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
25.02.2024.