பிப்.27., ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழக மக்களிடையே கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் சேவை அமைப்பாக மனிதநேய கலாச்சாரப் பேரவை திகழ்கிறது. தமிழர் ஒன்றுகூடல்கள், சமூக நல்லிணக்க பண்பாட்டு நிகழ்ச்சிகள்,இஃப்தார் நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம்கள், இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள், அமீரக தேசிய தின நிகழ்ச்சிகள், என MKP பல களங்களிலும் சேவையாற்றி வருகிறது. தாயகத்திலிருந்து தலைவர்களை, பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துதல், அதில் அமீரக அதிகாரிகளை , பிரமுகர்களை பங்கேற்க செய்தல் என செயல்பட்டு வரும் MKP தாயகத்திலிருந்து வரும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் பணிகளையும் செய்து கொடுக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் அமீரகத்தில் தமிழக மக்கள் பங்கேற்ற அதிகமான மாநாடுகளை, மக்கள் ஒன்றுகூடல்களை நடத்திய அமைப்பு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. அமீரக மண்டல செயலாளராக பணியாற்றி வந்த டாக்டர் அசாலி அகமது அவர்கள் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிர்வாகம் நிறைவு பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியிடம் வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வுக்கு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா
Author: admin
மே17 இயக்க மாநாட்டு பொதுக்கூட்டம்… மஜக துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்று சிறப்புரை…
பிப்.27., மே-17 இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் நிகழ்வின் நிறைவாக வெல்க தமிழ் தேசியம் மாநாட்டு பொதுக்கூட்டம் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் A.M.அஸாருதீன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களின் சாதனைகள், தமிழ்நாட்டு நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் சான்றோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால், திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மேலும் மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னை_கிழக்கு 25.02.2024.
மயிலாடுதுறையில்… மஜக பொதுக்குழு இறுதிகட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்…
பிப்.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் 28.02.2024 அன்று மயிலாடுதுறையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற உள்ளது. இறுதி கட்ட பணிகள் குறித்து மயிலாடுதுறை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டகளின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலாளரும், பொதுக்குழு ஏற்பாட்டு குழு தலைவருமான நாச்சிகுளம் தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுக்குழு ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், நாகை முபாரக், அஹமது கபீர், மாநில துணைச் செயலாளர் பேரா. சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லியாகத் அலி, அபுதாஹிர், இளைஞர் அணி மண்டல செயலாளர் மிஸ்பா, மயிலாடுதுறை மேற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம், மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மயிலாடுதுறை_மாவட்டம் 26.02.2024.
துபையில்… சாயுங்காலததில் தேனீருடன் ஒரு கலந்துரையாடல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…
பிப்ரவரி.26., மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் குவைத்தில் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) நடத்திய குவைத் தமிழர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று விட்டு, தாயகம் திரும்பும் வழியில் இருநாள் பயணமாக துபை வருகை தந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதநேய கலாச்சாரப் பேரவை நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள் பங்கேற்ற 'மு.தமிமுன் அன்சாரியுடன் - சாயுங்காலத்தில் ஒரு தேனீர் சந்திப்பு ' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டு நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு மண்டல செயலாளர் டாக்டர் அசாலி அகமது தலைமை தாங்கினார், ஹக்கீம் அவர்கள் இறை வசனம் ஓத பின்னர் அப்துல் ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் கல்வி, சமூகம். இந்திய அரசியல் சூழல் ஆகியன குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பிறகு ஐக்கிய அரபு அமீரக அரசு சூழலியல் அக்கறையுடன் 2024 ஆம் ஆண்டை நிலைத்தன்மை (Sustainability ) ஆண்டாக அறிவித்திருக்கும் முயற்சியை பாராட்டினார். நிறைவாக மண்டல செயலாளர் அபுல்ஹஸன் நன்றி கூறினார். இதில் துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா, அமீரக MKP அவைத்தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அன்னபூர்ணா உணவக மாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சி குறித்த விபரம் அறிந்த பலர் ஏன்
குவைத் MKP பொதுக்குழு மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்பு…
பிப்.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) குவைத் மண்டல பொதுக்குழு கூட்டம் மண்டலச் செயலாளர் நீடூர் நபிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினார். வளைகுடாவில் செயல்படும் MKP அமைப்புகளில் குவைத் மண்டலம் தற்போது செயல்பாடு ரீதியாக முதலிடத்திற்கு முன்னேறியிருப்பதாக பாராட்டி பேசினார். குவைத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 23 அன்று குவைத்தில் நடைபெற்ற 'குவைத் தமிழர் எழுச்சி மாநாட்டை' சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து கூறினார். கடந்த இரண்டாண்டுகளில் குவைத்தில் நடைபெற்ற இந்தியர் நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்ச்சியாக இது இருந்தாக குவைத் பிரமுகர்கள் கூறியதை சுட்டிக்காட்டினார். பிறகு அடுத்த 6 மாதங்களுக்கான செயல் திட்ட வரைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்து வரும் ரமலானில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறிக்கும் ஆலோசிக்கப்பட்டது. பிறகு மண்டல அவைத் தலைவராக வேலம்புதுக்குடி சர்புதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். கொள்கை பரப்பு செயலாளராக கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். பிறகு மாநாட்டிற்கு சிறப்பான பணிகளை செய்த நிர்வாகிகளுக்கு தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். நிறைவாக IT Wing செயலாளர் லால்பேட்டை முஜம்மில் அவர்கள் நன்றியுரை கூற