குவைத் MKP பொதுக்குழு மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

பிப்.26.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) குவைத் மண்டல பொதுக்குழு கூட்டம் மண்டலச் செயலாளர் நீடூர் நபிஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினார்.

வளைகுடாவில் செயல்படும் MKP அமைப்புகளில் குவைத் மண்டலம் தற்போது செயல்பாடு ரீதியாக முதலிடத்திற்கு முன்னேறியிருப்பதாக பாராட்டி பேசினார்.

குவைத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 23 அன்று குவைத்தில் நடைபெற்ற ‘குவைத் தமிழர் எழுச்சி மாநாட்டை’ சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து கூறினார்.

கடந்த இரண்டாண்டுகளில் குவைத்தில் நடைபெற்ற இந்தியர் நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்ச்சியாக இது இருந்தாக குவைத் பிரமுகர்கள் கூறியதை சுட்டிக்காட்டினார்.

பிறகு அடுத்த 6 மாதங்களுக்கான செயல் திட்ட வரைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்து வரும் ரமலானில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது குறிக்கும் ஆலோசிக்கப்பட்டது.

பிறகு மண்டல அவைத் தலைவராக வேலம்புதுக்குடி சர்புதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

கொள்கை பரப்பு செயலாளராக கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

பிறகு மாநாட்டிற்கு சிறப்பான பணிகளை செய்த நிர்வாகிகளுக்கு தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

நிறைவாக IT Wing செயலாளர் லால்பேட்டை முஜம்மில் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது.

தற்போது குவைத்தில் இந்திய அமைப்புகளில் துடிப்பாக செயல்படும் அமைப்பாகவும், 45 வயதுக்குட்பட்டர்கள் நிறைந்த அமைப்பாகவும் MKP திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
23.02.2024.