மார்ச்.01., கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கடந்த பிப்-28 அன்று மயிலாடுதுறையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி கெளண்டர் அமைக்கப்பட்டு, அழைப்பிதழ் பெறப்பட்ட பிறகு உள் அனுமதிக்கான பேட்ஜ் வழங்கப்பட்டது. அப்போது திருவாரூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்த்து மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில், அவைத்தலைவர் சீனி ஜெகபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் ஆகியோர் முன்னிலையில், 100 அடி நீளமுள்ள மஜக கொடியை மொத்தமாக சேர்ந்து தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு 'மலரட்டும் மலரட்டும் - மனித நேயம் மலரட்டும் ' என்ற முழக்கத்துடன் நுழைந்தனர். பிறகு மேடைக்கு வந்து தலைவரிடம் அதை கையளித்து மகிழ்ந்தனர். இது பொதுக்குழுவில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 28.02.2024.
Author: admin
+2 தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் அனைவரையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். இன்றைய உழைப்பும், படிப்பும், நாளைய வசந்தத்திற்கான நுழைவாயில் என்பதை உணருங்கள்! #12thExam | #MJKParty
மஜக சிறப்பு நிர்வாகக்குழு….
பிப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் பொதுக் குழுவுக்கு முதல் நாள் (பிப்ரவரி-27) இரவு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. அதில் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், நிகழ்ச்சி நிரல், நடப்பு அரசியல் சூழல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் மெளலா நாசர், பொருளாளர் J.S.ரிஃபாயி, துணைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில செயலாளர்கள் நாகை முபாரக், MH.ஜாபர் அலி, பல்லாவரம் ஷஃபீ, நெய்வேலி இப்ராஹிம், அஹமது கபீர், பாபு ஷாஹின்ஷா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணைச் செயலாளர்களும், மாநில அணிகளின் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 27.02.2024.
நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி… மஜக தலைமை பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்…..
பிப்ரவரி.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை - AJK மஹாலில் 28.02.2024 அன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மௌலா.நாசர் அவர்களால் வாசிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- 01. எழுச்சி பயணம் தொடரும் : மனிதநேய ஜனநாயக கட்சி 8-ஆண்டுகளை கடந்து 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் இப்பொதுக்குழு நடைபெறுகிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, வீழ்ச்சிகளை எல்லாம் எழுச்சிகளாக்கி, அதிகார மையங்களை நோக்கிய நமது வெற்றி பயணம் தொடரும் என்று இப்பொதுக்குழு சூளுரைக்கிறது. 2. நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு : எதிர்வரும் 2024- நாடாளுமன்ற தேர்தலில், கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்திடும் அதிகாரத்தை இப்பொதுக்குழு தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தலைமை நிர்வாகக் குழு அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்குமாறு இப்பொதுக்குழு அறிவுறுத்துகிறது. 03. EVM வேண்டாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, வாக்கு பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டு வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டு அதை வாக்காளர்கள் சரிபார்த்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட
மயிலாடுதுறையில்…. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு …. தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நாளை கூடுகிறது….
பிப்ரவரி.27., பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX.MLA தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முழுவதிலும் இருந்து இன்று மாலை 6 மணி முதல் மஜக பொதுக்குழு உறுப்பினர்கள் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்ட வண்ணமுள்ளனர். இரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நள்ளிரவு முதல் வந்திறங்கும் பொதுக் குழு உறுப்பினர்களை பொதுக்குழு நடைபெற உள்ள கூரை நாடு நோக்கி அழைத்து செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஒய்வெடுக்கவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்யும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் உள்ளிட்ட தலைமை